திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில், கேட்பாரற்ற நிலையில் கிடந்த இரண்டு சாக்குப் பைகளில் இருந்து கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா பொருட்கள் உள்ளிட்ட 19 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற விரைவு ரயில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடைக்கு வந்தடைந்தது. அப்போது ரயில்வே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். ரயிலின் முன்புற மற்றும் பின்புறப் பொதுப் பெட்டிகளில் இருக்கைகளுக்கு அடியில் கிடந்த இரண்டு சாக்குப் பைகளைச் சோதனையிட்டபோது, அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது, கஞ்சா தூள் கலக்கப்பட்ட சாக்லேட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். கஞ்சாவைக் காயவைத்து தூளாக்கி, அதனை மிட்டாய்களுடன் கலந்து 'கஞ்சா சாக்லேட்டுகளாக' மாற்றி விற்பனைக்குக் கொண்டு செல்லும் நூதன கடத்தல் முறையை கும்பல் கையாண்டுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த போதைப்பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன மற்றும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ரயில் நிலையத்தில் கஞ்சாவைத் தொடர்ந்து தற்போது கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள்
சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!
🕒 26 நவ., 2026, 10:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 19 கிலோ குட்கா பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








