Settings

முகப்பு/அரசியல்/ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்
அரசியல்

ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்

🕒 26 நவ., 2026, 09:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மயிலாடுதுறையில் நடைபெற்ற லட்சிய ஜனநாயக கட்சி கூட்டத்தில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வை கைது செய்ய வேண்டும் என மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா வலியுறுத்தியுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறையில் லட்சிய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா கலந்துகொண்டு, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது: "திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி செயல்படாமல், இதற்கு முந்தைய திராவிட இயக்கங்கள் பின்பற்றிய அதே பாதையில்தான் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும் பயணித்து வருகிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இரண்டு வார காலம் கடந்த பின்னரும் முதல்வர் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதுடன், அதுவும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராலேயே ஏற்படுகிறது என்றால், இவர்கள் எப்படி தமிழக மக்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்? கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வைக் காப்பாற்ற முயன்றால், இந்த ஆட்சியின் ஆயுள் காலம் முடிவுக்கு வரும் சூழல் ஏற்படும் என்பதே எங்களது கட்சியின் பார்வை. இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக மக்கள் இந்த அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், கடந்த தீபாவளியன்று மட்டும் 19 கொலைகள் நடந்துள்ளதாகவும், பாலியல் குற்றங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இந்த ஆட்சி மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது" என்றும் நெல்லை ஜீவா தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்அரசியல்

எம்எல்ஏ அருள்விக்னேஷை கைது செய்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Sugumaran🕒 நவ. 24
திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்அரசியல்

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பக்தர்களுடன் அமர்ந்து அன்னதானம் அருந்திய அமைச்சர்

Srinivasan🕒 நவ. 23
உச்ச நீதிமன்றம் சொல்லியும் தீபம் ஏற்ற மறுப்பது ஏன்? கொந்தளிக்கும் நைனார் நாகேந்திரன்!அரசியல்

உச்ச நீதிமன்றம் சொல்லியும் தீபம் ஏற்ற மறுப்பது ஏன்? கொந்தளிக்கும் நைனார் நாகேந்திரன்!

Anandakumar🕒 நவ. 23
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
அரசுப் பேருந்து - ராணுவ வாகனம் மோதல்; 50 வீரர்கள் உயிர் தப்பினர்!செய்திகள்

அரசுப் பேருந்து - ராணுவ வாகனம் மோதல்; 50 வீரர்கள் உயிர் தப்பினர்!

MSD🕒 நவ. 26
சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!செய்திகள்

சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!

MSD🕒 நவ. 26
வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!நகரங்கள்

வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!

ARAVINDHAN🕒 நவ. 26
பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!செய்திகள்

பதவி நீக்கம் கோரி நாமக்கல்லில் கொந்தளித்த ஆதித்தமிழர் பேரவை!

SRIDHAR🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔