Settings

முகப்பு/செய்திகள்/இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!
செய்திகள்

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி!

🕒 23 நவ., 2026, 03:58 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
இந்துக்களின் வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிரடி காட்டிய இந்து முன்னணி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் குறித்துப் பல முக்கியக் கருத்துகளைத் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், அதனைச் செயல்படுத்த வேண்டிய அறநிலையத்துறை ஆணையரே மறுஆய்வு மனு தாக்கல் செய்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். கோயில்களைப் பாதுகாப்பதும், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும்தான் அறநிலையத்துறையின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும் எனவும், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைப் பணத்தை நீதிமன்ற வழக்குகளுக்கான வழக்கறிஞர் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்குப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் விமர்சித்தார்.

தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது மத நல்லிணக்கத்திற்கு எந்த வகையிலும் எதிரானது அல்ல என்றும், இந்துக்களின் வழிபாட்டு உரிமையை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீபம் ஏற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் மீண்டும் தீபம் ஏற்றுவதுதான் தங்களது கோரிக்கை என்றார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியல் நோக்கத்துடன் தற்போதைய அரசு பெரிதுபடுத்துவதாகவும், அங்கு சென்று வழிபடுவதும் தீபம் ஏற்றுவதும் எவ்வாறு மத நல்லிணக்கத்திற்கு எதிராக அமையும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள் திருமணம், துக்க நிகழ்ச்சிகள் மற்றும் பொது விழாக்களில் சந்தித்துப் பேசுவது இயல்பான நாகரிகம் என்றும், அதனைத் தவறான கோணத்தில் அரசியலாகப் பார்க்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். வடஇந்தியாவில் ராமரையும், தென்னிந்தியாவில் முருகப்பெருமானையும் வைத்து அரசியல் செய்யப்படுவதாகக் கூறப்படும் விமர்சனங்களையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர் முருகானந்தம், செந்தில்குமார், மாநிலச் செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெகன், மதுரை கோட்டச் செயலாளர் பாலு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!செய்திகள்

சாலையில் கொந்தளித்த ஆண் மயில்கள்! ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!

SASHVI🕒 நவ. 23
குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!செய்திகள்

குளத்தில் மூழ்கி நபர் உயிரிழப்பு - திண்டுக்கல் மாவட்டத்தில் சோகம்!

VASANTHA🕒 நவ. 23
தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!செய்திகள்

தெருநாய்களால் தொடரும் விபத்துகள்: வேடசந்தூரில் காய்கறி வியாபாரி படுகாயமடைந்த சோகம்!

VASANTHA🕒 நவ. 23
ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!செய்திகள்

ஆறுகளில் தண்ணீர் இல்லை, மீன்களும் மாயம்: அதளபாதாளத்தில் டெல்டா மீனவர்களின் வாழ்வாதாரம்!

Rajan🕒 நவ. 23
7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!செய்திகள்

7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா நாட்டவர் உட்பட 9 பேர் அதிரடி கைது!

VASANTHA🕒 நவ. 23
பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணைசெய்திகள்

பரபரப்பு: சாலையோரம் கிடந்த வியாபாரியின் சடலம் - போலீசார் விசாரணை

Dinesh🕒 நவ. 23
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.30 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணைசெய்திகள்

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.30 லட்சம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை

Vijayaragavan🕒 நவ. 23
பெங்களூருவில் இருந்து ராசிபுரத்திற்கு கார்களில் கடத்தல்! 200 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்து ராஜஸ்தானியர்கள் கைது!செய்திகள்

பெங்களூருவில் இருந்து ராசிபுரத்திற்கு கார்களில் கடத்தல்! 200 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்து ராஜஸ்தானியர்கள் கைது!

SRIDHAR🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔