திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கிய நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பழைய ஆயக்குடி பெரும்பாறை காலனி அண்ணாநகரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் கண்மணி (43). இவர் எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள குளத்தில் நீரில் மூழ்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஆயக்குடி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராடி உடலைக் குளத்திலிருந்து மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த கண்மணியின் உடல் உடற்கூறாய்விற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









