திருவெண்ணெய்நல்லூர் அணைக்கட்டு சாலையில், திமுக மாநில இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவரணி சார்பில் பொதுமக்களுக்குப் பிரியாணி வழங்கப்பட்டது.
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அன்பு (எ) அன்பழகன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் பூக்கடை கணேசன், ஒன்றிய செயலாளர் கை.ரா.சடகோபன், நகர பொருளாளர் சையத் நாசர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நிர்மல்ராஜ் மற்றும் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









