Settings

முகப்பு/செய்திகள்/பேருந்து நிலையத்தில் பைக் திருட முயன்ற வாலிபர் கைது: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!
செய்திகள்

பேருந்து நிலையத்தில் பைக் திருட முயன்ற வாலிபர் கைது: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

🕒 26 நவ., 2026, 02:37 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பேருந்து நிலையத்தில் பைக் திருட முயன்ற வாலிபர் கைது: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பேருந்து நிலையத்தில் பைக் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் மீண்டும் ஒரு இருசக்கர வாகனத்தைத் திருட முயன்ற நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்டவர் உடன்குடி அருகே உள்ள தேரியூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பது தெரியவந்துள்ளது. இவர் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைவரிசை காட்டி வந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து சுமார் 8 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.ஏ. ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நாகராஜனிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மழை நேரத்தில் வீட்டுக் சுவர் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி பரிதாப பலி!செய்திகள்

மழை நேரத்தில் வீட்டுக் சுவர் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி பரிதாப பலி!

Ramachandran🕒 நவ. 26
பொதுமக்கள் நிம்மதி! பொன்னம்பட்டியில் கூண்டு வைத்து சிக்கிய 25 குரங்குகள் - வைரல் செய்திசெய்திகள்

பொதுமக்கள் நிம்மதி! பொன்னம்பட்டியில் கூண்டு வைத்து சிக்கிய 25 குரங்குகள் - வைரல் செய்தி

Ramachandran🕒 நவ. 26
விவசாயிகளை காக்க களம் இறங்கிய பாலாறு பாதுகாப்பு சங்கம்! திருப்பத்தூரில் களைகட்டிய முப்பெரும் விழா!செய்திகள்

விவசாயிகளை காக்க களம் இறங்கிய பாலாறு பாதுகாப்பு சங்கம்! திருப்பத்தூரில் களைகட்டிய முப்பெரும் விழா!

Srinivasan🕒 நவ. 26
வாடகையை குறைக்க கோரி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் திடீர் போராட்டம்!செய்திகள்

வாடகையை குறைக்க கோரி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் திடீர் போராட்டம்!

Dinesh🕒 நவ. 26
மாணவர்களின் நலனுக்காக அதிரடி திட்டம்: விருதுநகர் பள்ளிகளில் RO குடிநீர்!செய்திகள்

மாணவர்களின் நலனுக்காக அதிரடி திட்டம்: விருதுநகர் பள்ளிகளில் RO குடிநீர்!

Ramkumarsamy🕒 நவ. 26
ஆட்சியை கலைக்க மனு அளிப்பது மலிவான அரசியல் - பாஜகவை விளாசும் மு.வீரபாண்டியன்!செய்திகள்

ஆட்சியை கலைக்க மனு அளிப்பது மலிவான அரசியல் - பாஜகவை விளாசும் மு.வீரபாண்டியன்!

Dinesh🕒 நவ. 26
சாத்தூரில் வெளுத்து வாங்கிய கனமழை.. திணறிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்!நகரங்கள்

சாத்தூரில் வெளுத்து வாங்கிய கனமழை.. திணறிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்!

Ramkumarsamy🕒 நவ. 26
பரபரப்பு: இஸ்லாமிய பெண்களை அழைத்துச் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் - 5 பேர் கைதுநகரங்கள்

பரபரப்பு: இஸ்லாமிய பெண்களை அழைத்துச் சென்ற இளைஞர்கள் மீது தாக்குதல் - 5 பேர் கைது

NESARAJAN🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔