Settings

முகப்பு/செய்திகள்/பள்ளி சமையலறையில் பதுங்கிய 7 அடி பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!
செய்திகள்

பள்ளி சமையலறையில் பதுங்கிய 7 அடி பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!

🕒 26 நவ., 2026, 02:42 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பள்ளி சமையலறையில் பதுங்கிய 7 அடி பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •டி.என்.பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்த 7 அடி நீள சாரைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாகப் பிடித்தனர். சேதமடைந்த சுற்றுச்சுவரால் அச்சம் ஏற்பட்டுள்ளதாகப் பெற்றோர் கோரிக்கை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

டி.என்.பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இப்பள்ளியை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ள நிலையில், சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்கக் கோரி பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாம்பு புகுந்திருப்பதாக டி.என்.பாளையம் வனத்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வனத்துறை சார்பில் வேட்டைத் தடுப்புக் காவலர் பழனிச்சாமி பள்ளிக்கு விரைந்து சென்று ஒவ்வொரு அறையாகச் சோதனை நடத்தினார்.

அப்போது பள்ளியின் சமையலறையைச் சோதனையிட்டபோது, சமையல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெள்ளை நிற சாரைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது கண்டறியப்பட்டது. உடனே வேட்டைத் தடுப்புக் காவலர் அந்தப் பாம்பைப் பாதுகாப்பான முறையில் லாவகமாகப் பிடித்து வெளியே கொண்டு வந்தார். சுமார் 7 அடி நீளம் கொண்ட இந்த பாம்பைப் பள்ளி மாணவிகளும் ஆசிரியர்களும் ஒருபுறம் அச்சத்தோடு பார்த்தாலும், மறுபுறம் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட சாரைப்பாம்பு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடப்பட்டது.

இப்பள்ளியானது வனப்பகுதியை ஒட்டியும், முற்பதர்கள் அடர்ந்த பகுதியையொட்டியும் அமைந்துள்ளது. மேலும், பள்ளியின் சுற்றுச்சுவர் மூன்று இடங்களில் இடிந்து சேதமடைந்து காணப்படுகிறது. நீண்ட காலமாகியும் சுற்றுச்சுவர் முழுமையாக அமைக்கப்படாமல் உள்ளதால், பள்ளியின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாகக் கூறி பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வீரதீரச் செயல்களுக்கு அண்ணா பதக்கம்: உடனே விண்ணப்பிக்க தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்!செய்திகள்

வீரதீரச் செயல்களுக்கு அண்ணா பதக்கம்: உடனே விண்ணப்பிக்க தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்!

JOWIN AKASH🕒 நவ. 26
தீபத்தூனை 'கல் தூண்' என சித்தரித்து போஸ்டர்: கரூரில் பரபரப்பு புகார்!செய்திகள்

தீபத்தூனை 'கல் தூண்' என சித்தரித்து போஸ்டர்: கரூரில் பரபரப்பு புகார்!

Anandakumar🕒 நவ. 26
28ஆம் தேதி காங்கிரஸ் மாநாடு: தலைவர் மாணிக்கம் தாகூர் பங்கேற்பு!செய்திகள்

28ஆம் தேதி காங்கிரஸ் மாநாடு: தலைவர் மாணிக்கம் தாகூர் பங்கேற்பு!

JOWIN AKASH🕒 நவ. 26
மழை நேரத்தில் வீட்டுக் சுவர் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி பரிதாப பலி!செய்திகள்

மழை நேரத்தில் வீட்டுக் சுவர் இடிந்து விழுந்து கூலித் தொழிலாளி பரிதாப பலி!

Ramachandran🕒 நவ. 26
விவசாயிகளை காக்க களம் இறங்கிய பாலாறு பாதுகாப்பு சங்கம்! திருப்பத்தூரில் களைகட்டிய முப்பெரும் விழா!செய்திகள்

விவசாயிகளை காக்க களம் இறங்கிய பாலாறு பாதுகாப்பு சங்கம்! திருப்பத்தூரில் களைகட்டிய முப்பெரும் விழா!

Srinivasan🕒 நவ. 26
வாடகையை குறைக்க கோரி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் திடீர் போராட்டம்!செய்திகள்

வாடகையை குறைக்க கோரி ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் திடீர் போராட்டம்!

Dinesh🕒 நவ. 26
மாணவர்களின் நலனுக்காக அதிரடி திட்டம்: விருதுநகர் பள்ளிகளில் RO குடிநீர்!செய்திகள்

மாணவர்களின் நலனுக்காக அதிரடி திட்டம்: விருதுநகர் பள்ளிகளில் RO குடிநீர்!

Ramkumarsamy🕒 நவ. 26
ஆட்சியை கலைக்க மனு அளிப்பது மலிவான அரசியல் - பாஜகவை விளாசும் மு.வீரபாண்டியன்!செய்திகள்

ஆட்சியை கலைக்க மனு அளிப்பது மலிவான அரசியல் - பாஜகவை விளாசும் மு.வீரபாண்டியன்!

Dinesh🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔