அம்பன் அம்பரன் என்கிற இரு அசுரர்களை வதம் செய்வதற்காக அன்னை பராசக்தி காளி ரூபம் எடுத்து வந்த பொழுது அவருடன் வந்த குழந்தையான முருகன் இங்கு தங்கியதால் கந்தன்குடி என பெயர் பெற்றதாக கூறப்படும் வரலாற்று சிறப்புமிக்க கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட கோவில் கந்தன்குடியில் அமைந்துள்ளது.இந்த கோவில் சத்ரு சம்ஹார பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. மேலும் ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தில் சாமி தரிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் கந்த சஷ்டி பெருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று கோவில் கந்தன்குடியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விபூதி, மஞ்சள்,பஞ்சாமிர்தம்,பால்,தயிர் சந்தனம் என பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.









