Settings

முகப்பு/அரசியல்/6 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை - தமிழக அரசை சாடிய மார்க்சிஸ்ட் செயலாளர்!
அரசியல்

6 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை - தமிழக அரசை சாடிய மார்க்சிஸ்ட் செயலாளர்!

🕒 24 நவ., 2026, 09:56 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
6 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை - தமிழக அரசை சாடிய மார்க்சிஸ்ட் செயலாளர்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற நிர்வாகியின் குடும்பத் திருமண விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திய பின்னரே ரூ.75 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது."

தொடர்ந்து பேசிய அவர், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் மீண்டும் புதிய மனுக்களை தாக்கல் செய்வதைவிட, ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அந்தத் தீர்ப்பை கர்நாடக அரசு கட்டாயம் செயல்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருப்பதை வரவேற்பதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், கட்சியின் மாநிலக் குழு கூடி இதுகுறித்து ஆலோசித்து இறுதி முடிவை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!அரசியல்

11 தொடர் தோல்விகள்... ஸ்டாலினுடன் சிரித்துப் பேசுவதா? கொதித்தெழுந்த நத்தம் விஸ்வநாதன்!

VASANTHA🕒 நவ. 22
திமுகவிற்கு திடீர் அதிர்ச்சி! அதிமுகவில் இணைந்த நிர்வாகி சிராஜுதீன்!அரசியல்

திமுகவிற்கு திடீர் அதிர்ச்சி! அதிமுகவில் இணைந்த நிர்வாகி சிராஜுதீன்!

Anandakumar🕒 நவ. 22
நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க மார்ச் வரை அவகாசம் வேண்டும் - ஈரோடு விசைத்தறி சங்கங்கள் கோரிக்கை!அரசியல்

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க மார்ச் வரை அவகாசம் வேண்டும் - ஈரோடு விசைத்தறி சங்கங்கள் கோரிக்கை!

Dinesh🕒 நவ. 21
வீட்டுக்காவலை மீறிச் சென்ற பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதிரடி கைது!செய்திகள்

வீட்டுக்காவலை மீறிச் சென்ற பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதிரடி கைது!

Vijayaragavan🕒 நவ. 24
மார்ச் இறுதிக்குள் பாலப் பணிகளை முடிக்க வேண்டும் - எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடி உத்தரவு!நகரங்கள்

மார்ச் இறுதிக்குள் பாலப் பணிகளை முடிக்க வேண்டும் - எம்.பி. மாணிக்கம் தாகூர் அதிரடி உத்தரவு!

Ramkumarsamy🕒 நவ. 24
அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக ரூ.2.15 லட்சம் மதிப்பிலான வசதிகளை வழங்கிய டி.எம்.பி. அறக்கட்டளை!நகரங்கள்

அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக ரூ.2.15 லட்சம் மதிப்பிலான வசதிகளை வழங்கிய டி.எம்.பி. அறக்கட்டளை!

JOWIN AKASH🕒 நவ. 24
தீபஒளி தினத்தில் கரூரில் கோடை மழை போல் கொட்டி தீர்த்த திடீர் மழை!நகரங்கள்

தீபஒளி தினத்தில் கரூரில் கோடை மழை போல் கொட்டி தீர்த்த திடீர் மழை!

Anandakumar🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔