Settings

முகப்பு/விளையாட்டு/தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!
விளையாட்டு

தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!

🕒 24 நவ., 2026, 03:33 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •14 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய வில்வித்தை போட்டிக்கு மாநில அளவில் தங்கம் வென்று கும்மிடிப்பூண்டி மாணவன் கே.ஹர்ஷன் தகுதி பெற்றுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

14 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பள்ளி மாணவன் கே.ஹர்ஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணகுமார் - கே.ஆனந்தி தம்பதியின் மகனான கே.ஹர்ஷன், அங்குள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் 'டூ அட் எக்ஸ்' (Do At X) வில்வித்தை பயிற்சி மையத்தில் பயிற்சியாளர்கள் அப்துல் ரஹீம் மற்றும் தருண்குமார் ஆகியோரிடம் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், தேசிய வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்பதற்கான மாநில அளவிலான தகுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற மாணவன் கே.ஹர்ஷன், 360 புள்ளிகளுக்கு 320 புள்ளிகள் குவித்து அபார திறமையுடன் தங்கப் பதக்கம் வென்றார். மாநில அளவில் முதலிடம் பிடித்ததன் மூலம், தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை ஹர்ஷன் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவன் கே.ஹர்ஷனுக்கும், அவருக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர்கள் அப்துல் ரஹீம், தருண்குமார் ஆகியோருக்கும் கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!விளையாட்டு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!

NESARAJAN🕒 நவ. 18
மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!விளையாட்டு

மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!

Srinivasan🕒 நவ. 18
உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!விளையாட்டு

உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!

SRIDHAR🕒 நவ. 17
சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!விளையாட்டு

சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!

Vijayaragavan🕒 நவ. 17
தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!செய்திகள்

தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

Anandakumar🕒 நவ. 24
*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதுஆன்மீகம்

*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

VASANTHA🕒 நவ. 24
தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!ஆன்மீகம்

தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

VASANTHA🕒 நவ. 24
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔