தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றுவரும் உலகப்பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் 400 மீட்டர் நீளத்திலான தற்காலிக மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடற்கரையோரப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களை நிறுத்தியுள்ளனர்.
இந்த வாகன நிறுத்துமிடத்தில் இருந்து பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்கு வந்து செல்லும் வகையில், ஜே.ஜே.நகர் பகுதியில் இந்தத் தற்காலிக மரப்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்வது தவிர்க்கப்பட்டு, எளிdcதாக கோயிலை அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.









