Settings

முகப்பு/தமிழ்நாடு/கோர விபத்து: மீன் லோடு வாகனம் மோதி ஓட்டுநர் பலி!
தமிழ்நாடு

கோர விபத்து: மீன் லோடு வாகனம் மோதி ஓட்டுநர் பலி!

🕒 26 நவ., 2026, 06:14 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோர விபத்து: மீன் லோடு வாகனம் மோதி ஓட்டுநர் பலி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தூத்துக்குடி கேம்ப்-1 மேம்பாலத்தில் நிலக்கரி லாரி மீது மீன் வாகனம் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்த சஜின் (29), மெர்லின் தாஸ் (23) ஆகிய இருவரும் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் லோடு ஏற்றிக்கொண்டு பொலிரோ பிக்கப் வாகனத்தில் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சஜின் வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

அதே நேரத்தில், தூத்துக்குடி சரவணபுரம் ஒட்டரசுப்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (38) என்பவர் புதிய துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியை ஓட்டிச் சென்றார். தூத்துக்குடி கேம்ப்-1 மேம்பாலத்தின் மீது சென்றபோது, எதிர்பாராதவிதமாக சஜின் ஓட்டிச் சென்ற வாகனம், முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறம் பலமாக மோதியது.

இந்த விபத்தில் பொலிரோ வாகனத்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், ஓட்டுநர் சஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த மெர்லின் தாஸ் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தெர்மல் நகர் போலீசார், காயமடைந்தவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த சஜினின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Image credits: Google

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்தமிழ்நாடு

நடமாடும் இ-சேவை வாகனம் தொடக்கம்: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

NESARAJAN🕒 நவ. 23
பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!தமிழ்நாடு

பாதுகாப்புக்கு உயர் தொழில்நுட்பம்: நாகப்பட்டினத்தில் பறக்கும் ட்ரோன் கேமராக்கள்!

Sugumaran🕒 நவ. 23
மண்பாண்டத் தொழிலாளர்களின் கண்ணீர்: அரசுக்கு விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் என்ன?தமிழ்நாடு

மண்பாண்டத் தொழிலாளர்களின் கண்ணீர்: அரசுக்கு விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் என்ன?

NESARAJAN🕒 நவ. 22
ஏலகிரி மலையில் கார் தீப்பற்றி எரிந்தது: கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!செய்திகள்

ஏலகிரி மலையில் கார் தீப்பற்றி எரிந்தது: கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

ARAVINDHAN🕒 நவ. 26
தீபம் விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக கோபிசெட்டிபாளையத்தில் கிளர்ந்தெழுந்த வழக்கறிஞர்கள்!செய்திகள்

தீபம் விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக கோபிசெட்டிபாளையத்தில் கிளர்ந்தெழுந்த வழக்கறிஞர்கள்!

Dinesh🕒 நவ. 26
கருகும் டெல்டா பயிர்கள்! விவசாயிகளை நேரில் சந்தித்து அதிரடி ஆய்வு நடத்திய தி.மு.க. குழு!செய்திகள்

கருகும் டெல்டா பயிர்கள்! விவசாயிகளை நேரில் சந்தித்து அதிரடி ஆய்வு நடத்திய தி.மு.க. குழு!

Rajan🕒 நவ. 26
தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தல்: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கோரிக்கை!நகரங்கள்

தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தல்: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கோரிக்கை!

Rajan🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔