விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து மற்றும் மாவட்டத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
முக்கிய கோரிக்கைகள்:
- மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணியிடங்களை நிரப்பும் திட்டத்தைக் கைவிட்டு, மாவட்ட ஆள்சேர்ப்பு மையம் மூலம் வெளிப்படையாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
- விற்பனை இலக்கை முழுமையாக எட்டிய நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
- பொது விநியோகத் திட்டத்திற்கென்று தனியாகத் துறை ஒன்றை உருவாக்க வேண்டும்.
- தேர்தல் வாக்குறுதியின்படி தகுதியான எடையாளர்களை உடனே நியமிக்க வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக நியாய விலைக் கடை பணியாளர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.









