Settings

முகப்பு/செய்திகள்/நெல்லையில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
செய்திகள்

நெல்லையில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

🕒 22 செப்., 2026, 05:22 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நெல்லையில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை எம்.எல்.ஏ. ஆர்.எஸ். முருகன் தொடங்கி வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை நடுநிலை வகுப்புகளான 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நெல்லை டவுன் பகுதியில் உள்ள கல்லணை மாநகராட்சி பள்ளியில் விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நெல்லை தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானா ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டனர். பள்ளியில் சுடச்சுட வழங்கப்பட்ட காலை உணவை மாணவர்கள் ஆர்வத்துடன் சாப்பிட்டனர்.

இந்த விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள 352 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 32,734 குழந்தைகள் பயன்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
செய்தித்தாள்களைத் திறந்தாலே போக்சோ செய்திகள் வருகின்றன – தேனி நீதிபதி இரஜினிசெய்திகள்

செய்தித்தாள்களைத் திறந்தாலே போக்சோ செய்திகள் வருகின்றன – தேனி நீதிபதி இரஜினி

Admin🕒 செப். 22
நாட்டு துப்பாக்கிகள்,வெடிமருந்துகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் அதிரடி கைதுசெய்திகள்

நாட்டு துப்பாக்கிகள்,வெடிமருந்துகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் அதிரடி கைது

Ramkumarsamy🕒 செப். 22
மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த கமுதி இளைஞர் கைதுசெய்திகள்

மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த கமுதி இளைஞர் கைது

Ramkumarsamy🕒 செப். 22
தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!செய்திகள்

தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

Anandakumar🕒 நவ. 24
தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!விளையாட்டு

தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!

sudarvennila🕒 நவ. 24
*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதுஆன்மீகம்

*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

VASANTHA🕒 நவ. 24
தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!ஆன்மீகம்

தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

VASANTHA🕒 நவ. 24
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔