Settings

முகப்பு/இந்தியா/தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!
இந்தியா

தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!

🕒 24 நவ., 2026, 07:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான வளைபந்து போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்ற தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற 43வது தேசிய அளவிலான வளைபந்து (Floorball) போட்டியில், தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றிய தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள கிரீன்ஃபீல்டு மைதானத்தில் கடந்த நவம்பர் 17 முதல் 21 வரை நடைபெற்ற இத்தொடரில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 22 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

போட்டி முடிவுகளின்படி, ஆண்கள் பிரிவு போட்டியில் சஞ்சய் பிரசாத் தங்கப் பதக்கமும், பெண்கள் பிரிவில் தேவதர்ஷினி, வின்சி மற்றும் மகாலட்சுமி ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மேலும், ஆண்கள் தனிநபர் பிரிவில் சஞ்சய் பிரசாத் வெண்கலப் பதக்கமும், பெண்கள் கலப்பு இரட்டையர் போட்டியில் வின்சியும் தங்கப் பதக்கமும், இரட்டையர் போட்டியில் மகாலட்சுமி வெள்ளிப் பதக்கமும் வென்று தமிழக அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றுத் தந்தனர்.

வெற்றி பெற்று சொந்த ஊரான வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த மாணவர்களுக்கும், பயிற்சி அளித்த இந்திய வளைபந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர்கள் முரளி, சாமுவேல் ஆகியோருக்கும் கிராம மக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் சார்பில் மேளதாளங்களுடன் மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய நடுவர்களாகச் செயல்பட்ட ராஜேஷ், சங்கர் மற்றும் அணியைச் சிறப்பாக வழிநடத்தி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த தமிழ்நாடு வளைபந்து சங்கச் செயலாளர் சங்கர் ஆகியோருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசியப் பயிற்சியாளர் முரளி, போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள தமிழக விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை தமிழக அரசு உரிய முறையில் கவுரவித்து, அவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
நாமக்கல்லில் ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலை திறப்பு விழா!இந்தியா

நாமக்கல்லில் ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலை திறப்பு விழா!

SRIDHAR🕒 நவ. 14
ஹோர்முஸ் ஜலசந்தியில் மாயமான திண்டுக்கல் இளைஞர்: 9 மாதங்களாகத் தவிக்கும் பெற்றோர்இந்தியா

ஹோர்முஸ் ஜலசந்தியில் மாயமான திண்டுக்கல் இளைஞர்: 9 மாதங்களாகத் தவிக்கும் பெற்றோர்

VASANTHA🕒 நவ. 12
Modi likely to attend Delhi Dussehra event: 2,500 police deployed with 3-tier securityஇந்தியா

Modi likely to attend Delhi Dussehra event: 2,500 police deployed with 3-tier security

Admin🕒 அக். 20
Modi likely to attend Delhi Dussehra event: 2,500 police deployed with 3-tier securityஇந்தியா

Modi likely to attend Delhi Dussehra event: 2,500 police deployed with 3-tier security

Admin🕒 அக். 20
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் பலியா? திருச்சி அரசு மருத்துவமனை முன்பு அதிரடி சாலை மறியல்!செய்திகள்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் பலியா? திருச்சி அரசு மருத்துவமனை முன்பு அதிரடி சாலை மறியல்!

MSD🕒 நவ. 24
மிருகங்களைப் போல குப்பை வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்! கொதித்தெழுந்த ஊழியர்கள்!செய்திகள்

மிருகங்களைப் போல குப்பை வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்! கொதித்தெழுந்த ஊழியர்கள்!

SASHVI🕒 நவ. 24
சதுரகிரி மலையேற அனுமதி: கார்த்திகை பௌர்ணமி சிறப்பு தரிசனத்தில் திரண்ட பக்தர்கள்!செய்திகள்

சதுரகிரி மலையேற அனுமதி: கார்த்திகை பௌர்ணமி சிறப்பு தரிசனத்தில் திரண்ட பக்தர்கள்!

Ramkumarsamy🕒 நவ. 24
உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரிக்க முயற்சி! திருச்சியில் அதிரடி கைது!செய்திகள்

உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரிக்க முயற்சி! திருச்சியில் அதிரடி கைது!

MSD🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔