Settings

முகப்பு/செய்திகள்/தேசிய பால் தினம்: ஆவின் பால் முகவர்கள் சங்கம் சார்பில் அன்னதானம்!
செய்திகள்

தேசிய பால் தினம்: ஆவின் பால் முகவர்கள் சங்கம் சார்பில் அன்னதானம்!

🕒 26 நவ., 2026, 04:46 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தேசிய பால் தினம்: ஆவின் பால் முகவர்கள் சங்கம் சார்பில் அன்னதானம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தேசிய பால் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஆவின் பால் முகவர்கள் நலச்சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய பால் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆவின் பால் முகவர்கள் நலச்சங்கம் சார்பில் வாரச்சந்தை சாலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆவின் பால் முகவர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஆர். மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் எம். சீனிவாசன் மற்றும் பொருளாளர் என். உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் செயலாளர் எஸ். தீபா வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்நிகழ்வில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கே.பி.எஸ். மாதேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், சந்திரசேகரன் மற்றும் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி வாணியம்பாடி கிளை மேலாளர் அந்தோணி தாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றி வாழ்த்துத் தெரிவித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, ஆவின் பொது மேலாளர் டாக்டர் சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இளைஞரணி அமைப்பாளர் எஸ்.பி.எஸ். அருண்குமார், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை வியாபாரிகள் சங்க செயலாளர் வி.பி. சக்தி, கௌரவ தலைவர் முன்னா மற்றும் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த ஆவின் பால் முகவர்கள் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், தனியார் பால் முகவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில், சங்கத்தின் துணைத் தலைவர் முஜிபூர் ரஹ்மான் நன்றியுரை ஆற்றினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பள்ளி சமையலறையில் பதுங்கிய 7 அடி பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!செய்திகள்

பள்ளி சமையலறையில் பதுங்கிய 7 அடி பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!

Dinesh🕒 நவ. 26
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகத் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாம்!செய்திகள்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகத் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாம்!

JOWIN AKASH🕒 நவ. 26
பேருந்து நிலையத்தில் பைக் திருட முயன்ற வாலிபர் கைது: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!செய்திகள்

பேருந்து நிலையத்தில் பைக் திருட முயன்ற வாலிபர் கைது: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

JOWIN AKASH🕒 நவ. 26
வீரதீரச் செயல்களுக்கு அண்ணா பதக்கம்: உடனே விண்ணப்பிக்க தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்!செய்திகள்

வீரதீரச் செயல்களுக்கு அண்ணா பதக்கம்: உடனே விண்ணப்பிக்க தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்!

JOWIN AKASH🕒 நவ. 26
ஐயங்குளத்தில் பவனி வந்த பராசக்தியம்மன்! திருவண்ணாமலை தீபத் திருவிழா ஹைலைட்ஸ்!நகரங்கள்

ஐயங்குளத்தில் பவனி வந்த பராசக்தியம்மன்! திருவண்ணாமலை தீபத் திருவிழா ஹைலைட்ஸ்!

Srinivasan🕒 நவ. 27
தீபத்தூனை 'கல் தூண்' என சித்தரித்து போஸ்டர்: கரூரில் பரபரப்பு புகார்!செய்திகள்

தீபத்தூனை 'கல் தூண்' என சித்தரித்து போஸ்டர்: கரூரில் பரபரப்பு புகார்!

Anandakumar🕒 நவ. 26
28ஆம் தேதி காங்கிரஸ் மாநாடு: தலைவர் மாணிக்கம் தாகூர் பங்கேற்பு!செய்திகள்

28ஆம் தேதி காங்கிரஸ் மாநாடு: தலைவர் மாணிக்கம் தாகூர் பங்கேற்பு!

JOWIN AKASH🕒 நவ. 26
விவசாயிகளை காக்க களம் இறங்கிய பாலாறு பாதுகாப்பு சங்கம்! திருப்பத்தூரில் களைகட்டிய முப்பெரும் விழா!செய்திகள்

விவசாயிகளை காக்க களம் இறங்கிய பாலாறு பாதுகாப்பு சங்கம்! திருப்பத்தூரில் களைகட்டிய முப்பெரும் விழா!

Srinivasan🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔