Settings

முகப்பு/செய்திகள்/குடிபோதையில் அட்டகாசம்! காரை வழிமறித்து VAO மற்றும் முன்னாள் ராணுவ வீரரிடம் வழிப்பறி செய்த கும்பல் கைது!
செய்திகள்

குடிபோதையில் அட்டகாசம்! காரை வழிமறித்து VAO மற்றும் முன்னாள் ராணுவ வீரரிடம் வழிப்பறி செய்த கும்பல் கைது!

🕒 26 நவ., 2026, 04:08 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குடிபோதையில் அட்டகாசம்! காரை வழிமறித்து VAO மற்றும் முன்னாள் ராணுவ வீரரிடம் வழிப்பறி செய்த கும்பல் கைது! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் முன்னாள் ராணுவ வீரரை வழமறித்து தாக்கி பணம் பறித்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர் கிராம நிர்வாக அலுவலராகப் (VAO) பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பரான ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவரின் மகன் சிங்காரவேலு (45), முன்னாள் ராணுவ வீரர் ஆவார். சசிகுமாரும், சிங்காரவேலுவும் நேற்று இரவு நாட்றம்பள்ளியில் இருந்து காரில் ஊருக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நாட்றம்பள்ளி ஏரிக்கோடி பகுதியில் மதுபோதையில் இருந்த 5 வாலிபர்கள் இவர்களது காரை வழிமறித்து ஆபாசமாக திட்டியுள்ளனர். மேலும், காரின் கண்ணாடியை அடித்து உடைத்து இருவரையும் தாக்கியுள்ளனர். பீர் பாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவர்களிடமிருந்த ரூ.200 பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருவரும் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இந்த வழிப்பறி மற்றும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட அதிபெரமனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ஆகாஷ் (27), சங்கர் மகன் அபிஷேக் (22), நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் கவியரசன் (22), சமையகாரனூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் மேகநாதன் (21), வேட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் மேகநாதன் (18) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களைத் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட ஆகாஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர். மேலும், நாட்றம்பள்ளியில் உள்ள அரசு மதுபானக் கடை பூட்டிய பிறகும், இந்த வாலிபர்கள் மது பாட்டில்களைக் கேட்டு நைட்டிங் ஹவுஸ் பகுதியில் தகராறில் ஈடுபட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பள்ளி சமையலறையில் பதுங்கிய 7 அடி பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!செய்திகள்

பள்ளி சமையலறையில் பதுங்கிய 7 அடி பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!

Dinesh🕒 நவ. 26
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகத் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாம்!செய்திகள்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகத் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாம்!

JOWIN AKASH🕒 நவ. 26
பேருந்து நிலையத்தில் பைக் திருட முயன்ற வாலிபர் கைது: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!செய்திகள்

பேருந்து நிலையத்தில் பைக் திருட முயன்ற வாலிபர் கைது: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

JOWIN AKASH🕒 நவ. 26
வீரதீரச் செயல்களுக்கு அண்ணா பதக்கம்: உடனே விண்ணப்பிக்க தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்!செய்திகள்

வீரதீரச் செயல்களுக்கு அண்ணா பதக்கம்: உடனே விண்ணப்பிக்க தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்!

JOWIN AKASH🕒 நவ. 26
ஐயங்குளத்தில் பவனி வந்த பராசக்தியம்மன்! திருவண்ணாமலை தீபத் திருவிழா ஹைலைட்ஸ்!நகரங்கள்

ஐயங்குளத்தில் பவனி வந்த பராசக்தியம்மன்! திருவண்ணாமலை தீபத் திருவிழா ஹைலைட்ஸ்!

Srinivasan🕒 நவ. 27
தீபத்தூனை 'கல் தூண்' என சித்தரித்து போஸ்டர்: கரூரில் பரபரப்பு புகார்!செய்திகள்

தீபத்தூனை 'கல் தூண்' என சித்தரித்து போஸ்டர்: கரூரில் பரபரப்பு புகார்!

Anandakumar🕒 நவ. 26
28ஆம் தேதி காங்கிரஸ் மாநாடு: தலைவர் மாணிக்கம் தாகூர் பங்கேற்பு!செய்திகள்

28ஆம் தேதி காங்கிரஸ் மாநாடு: தலைவர் மாணிக்கம் தாகூர் பங்கேற்பு!

JOWIN AKASH🕒 நவ. 26
விவசாயிகளை காக்க களம் இறங்கிய பாலாறு பாதுகாப்பு சங்கம்! திருப்பத்தூரில் களைகட்டிய முப்பெரும் விழா!செய்திகள்

விவசாயிகளை காக்க களம் இறங்கிய பாலாறு பாதுகாப்பு சங்கம்! திருப்பத்தூரில் களைகட்டிய முப்பெரும் விழா!

Srinivasan🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔