திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வந்த சின்னராஜ் (38), அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்தது விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி, ஆசிரியர் சின்னராஜை கடந்த நவம்பர் 23, 2026 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் தீவிர துறை ரீதியான விசாரணையை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, மாணவிக்குத் தொந்தரவு அளித்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். பாலமுரளி, ஆசிரியர் சின்னராஜை பணியிடை நீக்கம் (Suspension) செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.









