Settings

முகப்பு/செய்திகள்/ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் நவீன முறை: விவசாயிகள் வரவேற்பு!
செய்திகள்

ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் நவீன முறை: விவசாயிகள் வரவேற்பு!

🕒 23 நவ., 2026, 09:54 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் நவீன முறை: விவசாயிகள் வரவேற்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையில் ட்ரோன் மூலம் நானோ உரம் தெளிக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் உரம் தெளிக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை கிராமத்தில் விவசாயத்தில் ஆள் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் கூலிச் செலவுக்கு தீர்வாக, ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் நானோ உரம் தெளிக்கும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இப்கோ நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த செயல்முறை விளக்க நிகழ்ச்சியில், விவசாயிகள் மத்தியில் நவீன விவசாயத் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி மேற்கொண்டுவரும் விவசாயிகளின் வயல்களில் ட்ரோன் மூலம் நானோ உரங்கள் தெளிக்கப்படும் முறை நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. வயலின் மீது ட்ரோன் பறந்து சென்று சீரான முறையில் உரத்தைத் தெளிப்பதை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

நேரமும் செலவும் மிச்சம்

ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மில்லி நானோ யூரியா போதுமானது. இதனை தேவையான அளவு தண்ணீரில் கலந்து ட்ரோன் மூலம் தெளிக்கலாம். இந்த முறையில் வெறும் 10 நிமிடங்களில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் உரம் தெளிக்கும் பணியை முடிக்க முடியும். அதேபோல் 10 ஏக்கர் பரப்பளவு நிலமாக இருந்தாலும் சுமார் 2 மணி நேரத்திற்குள் உரம் தெளிக்கும் பணியை நிறைவு செய்யலாம். இதனால் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நானோ உரங்கள் இலை வழியாக நேரடியாக பயிர்களுக்கு கிடைப்பதால், ஊட்டச்சத்துகள் எளிதில் உறிஞ்சப்பட்டு பயிர்களின் வளர்ச்சி மேம்படுவதுடன் மகசூல் அதிகரிப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இப்கோ நிறுவனத்தின் நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி. உரங்களை இந்த முறையில் எளிதாக தெளிக்கலாம்.

விவசாயிகள் வரவேற்பு

சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறுகையில், "மண்ணில் உரங்களை இடுவதைக் காட்டிலும் இலை வழியாக நானோ உரங்களை தெளிப்பதால் உரச் செலவு கணிசமாக குறைகிறது. ஒரு மூட்டை டி.ஏ.பி. உரத்தின் விலை ரூ.1,400 என்ற நிலையில், நானோ டி.ஏ.பி. ரூ.600 மட்டுமே என்பதால் கணிசமான தொகை மிச்சமாகிறது. விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் உள்ள சிரமம் மற்றும் அதிக கூலிச் செலவு ஆகியவற்றுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் மிகச் சிறந்த தீர்வாக அமைந்துள்ளது" என்றார்.

தற்போது ஏ.டி.டி. 37 ரக நெல்லை சாகுபடி செய்துள்ள அவர், ட்ரோன் மூலம் வெறும் அரை மணி நேரத்தில் நாலரை ஏக்கர் நிலத்திற்கும் உரம் தெளித்து முடித்துவிட்டதாகவும், இதனால் பணச்செலவு மற்றும் மன உளைச்சல் இரண்டும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். தொழிலாளர்கள் வருகைக்காக காத்திருக்கும் அவசியமின்றி, விவசாயப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள ட்ரோன் தொழில்நுட்பம் கைக்கொடுத்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சொத்துக்காக பெற்ற தாயை அடித்துத் துன்புறுத்தும் மகன்கள்! நாகப்பட்டினத்தில் ஷாக் சம்பவம்!செய்திகள்

சொத்துக்காக பெற்ற தாயை அடித்துத் துன்புறுத்தும் மகன்கள்! நாகப்பட்டினத்தில் ஷாக் சம்பவம்!

Sugumaran🕒 நவ. 23
சபரிமலை சென்ற பக்தர்கள் மீது மோதிய பேருந்து: இருவர் பலி, சோகத்தில் விழுப்புரம்செய்திகள்

சபரிமலை சென்ற பக்தர்கள் மீது மோதிய பேருந்து: இருவர் பலி, சோகத்தில் விழுப்புரம்

Arivazhagan🕒 நவ. 23
மயான சாலை முதல் கோவில் வரை ஆக்கிரமிப்பு: உசிலம்பட்டி சார் ஆட்சியரிடம் மக்கள் புகார்!செய்திகள்

மயான சாலை முதல் கோவில் வரை ஆக்கிரமிப்பு: உசிலம்பட்டி சார் ஆட்சியரிடம் மக்கள் புகார்!

Vijay🕒 நவ. 23
கரும்பு சாகுபடியை அதிகரிக்க சர்க்கரை ஆலை தீவிரம் - விவசாயிகளுடன் ஆலோசனை!செய்திகள்

கரும்பு சாகுபடியை அதிகரிக்க சர்க்கரை ஆலை தீவிரம் - விவசாயிகளுடன் ஆலோசனை!

Rajan🕒 நவ. 23
காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!நகரங்கள்

காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!

Arivazhagan🕒 நவ. 23
கூரை வீட்டின் மீது கவிழ்ந்த எம்.சாண்ட் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி!நகரங்கள்

கூரை வீட்டின் மீது கவிழ்ந்த எம்.சாண்ட் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி!

Arivazhagan🕒 நவ. 23
காவல் ஆணையர் உத்தரவு எதிரொலி: திருச்சியில் ரூ.2.84 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது!செய்திகள்

காவல் ஆணையர் உத்தரவு எதிரொலி: திருச்சியில் ரூ.2.84 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது!

MSD🕒 நவ. 23
வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுப்பு: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பாதுகாப்பு தீவிரம்செய்திகள்

வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுப்பு: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பாதுகாப்பு தீவிரம்

Vijay🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔