Settings

முகப்பு/செய்திகள்/பறவை காய்ச்சல் எதிரொலி: ஓமன் நாட்டில் இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை!
செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி: ஓமன் நாட்டில் இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை!

🕒 23 நவ., 2026, 10:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பறவை காய்ச்சல் எதிரொலி: ஓமன் நாட்டில் இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கடலூர் பறவை காய்ச்சல் எதிரொலியாக ஓமன் நாட்டில் இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதால், நாமக்கல் மண்டலத்தில் ரூ.3 கோடிக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கடலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, ஓமன் நாட்டில் இந்திய முட்டை இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள பண்ணைகளில் சுமார் 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்பட்டு, தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்காகவும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. குறிப்பாக, நாமக்கல் மண்டலத்திலிருந்து அரபு நாடுகள் மற்றும் ஓமனுக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கடலூரில் ஏற்பட்ட பறவை காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான கறிக்கோழிகள் அழிக்கப்பட்டதை அடுத்து, ஓமன் அரசு இந்திய முட்டை இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது.

இது குறித்து முட்டை ஏற்றுமதியாளர் செந்தில் கூறுகையில், "கடலூரில் கறிக்கோழிகளுக்கு ஏற்பட்டுள்ள பறவை காய்ச்சலால் எங்களது ஏற்றுமதி வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஓமன், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், மாலத்தீவு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாங்கள் முட்டைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். கடந்த 2008ஆம் ஆண்டு பறவைக் காய்ச்சல் பரவியபோதும், ஓமன் நாட்டின் தொழில்நுட்பக் குழு நேரில் வந்து ஆய்வு செய்தபிறகு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், ஓமன் அரசுடன் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும், தமிழக கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் முட்டை ஏற்றுமதியாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தி, ஏற்றுமதி தடை நீங்க வழிவகை செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மக்களின் கோரிக்கை: டிசம்பர் 2-ல் களமிறங்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிசெய்திகள்

மக்களின் கோரிக்கை: டிசம்பர் 2-ல் களமிறங்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி

Rajan🕒 நவ. 23
சொத்துக்காக பெற்ற தாயை அடித்துத் துன்புறுத்தும் மகன்கள்! நாகப்பட்டினத்தில் ஷாக் சம்பவம்!செய்திகள்

சொத்துக்காக பெற்ற தாயை அடித்துத் துன்புறுத்தும் மகன்கள்! நாகப்பட்டினத்தில் ஷாக் சம்பவம்!

Sugumaran🕒 நவ. 23
சபரிமலை சென்ற பக்தர்கள் மீது மோதிய பேருந்து: இருவர் பலி, சோகத்தில் விழுப்புரம்செய்திகள்

சபரிமலை சென்ற பக்தர்கள் மீது மோதிய பேருந்து: இருவர் பலி, சோகத்தில் விழுப்புரம்

Arivazhagan🕒 நவ. 23
மயான சாலை முதல் கோவில் வரை ஆக்கிரமிப்பு: உசிலம்பட்டி சார் ஆட்சியரிடம் மக்கள் புகார்!செய்திகள்

மயான சாலை முதல் கோவில் வரை ஆக்கிரமிப்பு: உசிலம்பட்டி சார் ஆட்சியரிடம் மக்கள் புகார்!

Vijay🕒 நவ. 23
காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!நகரங்கள்

காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!

Arivazhagan🕒 நவ. 23
கூரை வீட்டின் மீது கவிழ்ந்த எம்.சாண்ட் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி!நகரங்கள்

கூரை வீட்டின் மீது கவிழ்ந்த எம்.சாண்ட் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி!

Arivazhagan🕒 நவ. 23
கரும்பு சாகுபடியை அதிகரிக்க சர்க்கரை ஆலை தீவிரம் - விவசாயிகளுடன் ஆலோசனை!செய்திகள்

கரும்பு சாகுபடியை அதிகரிக்க சர்க்கரை ஆலை தீவிரம் - விவசாயிகளுடன் ஆலோசனை!

Rajan🕒 நவ. 23
காவல் ஆணையர் உத்தரவு எதிரொலி: திருச்சியில் ரூ.2.84 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது!செய்திகள்

காவல் ஆணையர் உத்தரவு எதிரொலி: திருச்சியில் ரூ.2.84 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது!

MSD🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔