Settings

முகப்பு/செய்திகள்/காதணி விழா சென்று திரும்பியபோது சோகம்: முசிறி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
செய்திகள்

காதணி விழா சென்று திரும்பியபோது சோகம்: முசிறி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

🕒 22 நவ., 2026, 02:48 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காதணி விழா சென்று திரும்பியபோது சோகம்: முசிறி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருச்சி மாவட்டம் முசிறி அருகே வேன் மரத்தில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. ஜம்புநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வேன் மரத்தில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளர்கள் 10 பேர், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்பதற்காக மாருதி ஈகோ வேனில் சென்றிருந்தனர்.

விழா முடிந்து சொந்த ஊரான திருக்காட்டுப்பள்ளிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, துறையூர் - முசிறி சாலையில் ஜம்புநாதபுரம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் மீது அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த பாவாடை, மாணிக்கம், ராஜேஷ், முருகன், சங்கிலி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ஜம்புநாதபுரம் காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர், படுகாயமடைந்த 5 பேரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சக்திவேல், சுப்பிரமணி, சீதாராமன் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து ஜம்புநாதபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

சீர்திருத்தி ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் உடைந்த குடிநீர் குழாய் - கொந்தளிப்பில் பொதுமக்கள்!

Rajan🕒 நவ. 22
பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்!நகரங்கள்

பணியில் இருந்த பாதுகாவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. திருச்சி மாவட்டத்தில் சோகம்!

Ramachandran🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!செய்திகள்

தஞ்சை மக்களே கவனம்! உங்கள் மின் குறைகளை தீர்க்க நவ.24-ல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!செய்திகள்

தஞ்சாவூர் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரம்: வேளாண் இயக்குனர் முரளிதரன் நேரடி ஆய்வு!

Rajan🕒 நவ. 22
மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்விஅரசியல்

மேகதாது விவகாரம்: முதல்வர் விஜய் மவுனம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Rajan🕒 நவ. 22
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔