Settings

முகப்பு/விவசாயம்/தொடர் மழையால் நாசமான சம்பா சாகுபடி: கவலையில் திருவாரூர் விவசாயிகள்!
விவசாயம்

தொடர் மழையால் நாசமான சம்பா சாகுபடி: கவலையில் திருவாரூர் விவசாயிகள்!

🕒 31 அக்., 2026, 07:42 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
தொடர் மழையால் நாசமான சம்பா சாகுபடி: கவலையில் திருவாரூர் விவசாயிகள்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விதைகள் முளைக்காமல் அழுகியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி குருவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, சம்பா சாகுபடியையாவது மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருந்தனர். தொடர்ந்து, செப்டம்பர் 1-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். டிராக்டர்கள் மூலம் வயல்களை உழுது, நேரடி நெல் விதைப்புப் பணிகளை மேற்கொண்டனர். ஏற்கெனவே பாசன நீர் கிடைக்காமல் பல பகுதிகளில் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மழையை நம்பி சம்பா சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் தயாராகினர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, கோட்டூர் அருகே உள்ள காரியமங்கலம், விக்கிரபாண்டியம், புழுதிக்குடி, குலமாணிக்கம் உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் விதைக்கப்பட்ட நெல் விதைகள் முளைக்காமல் அழுகத் தொடங்கியுள்ளன. சில இடங்களில் விதைகள் முளைக்காததால் மீண்டும் விதைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கூடுதல் செலவினங்களுடன் பொருளாதார இழப்பையும் சந்திக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே குருவை சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் தவித்த நிலையில், ஒருபோக சம்பா சாகுபடியையாவது செய்து வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால், தொடர்ந்து பெய்த கனமழையால் விதைக்கப்பட்ட நெல் விதைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். எனவே வேளாண்மைத் துறை அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கணக்கெடுத்து, உரிய இடுபொருள் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விவசாயிகள் மகிழ்ச்சி! விழுப்புரத்தில் தீவிரமடையும் கால்வாய் தூர்வாரும் பணிகள்!விவசாயம்

விவசாயிகள் மகிழ்ச்சி! விழுப்புரத்தில் தீவிரமடையும் கால்வாய் தூர்வாரும் பணிகள்!

Arivazhagan🕒 நவ. 18
தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனைவிவசாயம்

தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

NESARAJAN🕒 நவ. 18
இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சுவிவசாயம்

இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சு

SASHVI🕒 நவ. 17
விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!விவசாயம்

விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

D Velmurugan🕒 நவ. 17
திருச்சி விவசாயிகளுக்கு நற்செய்தி: சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!விவசாயம்

திருச்சி விவசாயிகளுக்கு நற்செய்தி: சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

MSD🕒 நவ. 17
பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!செய்திகள்

பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!

Sugumaran🕒 நவ. 22
அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!செய்திகள்

அதிர்ச்சி! விவசாய நிலத்தில் உலா வந்த மலைப்பாம்பு - ஏலகிரி மலையில் விட்ட இளைஞர்கள்!

ARAVINDHAN🕒 நவ. 22
நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!நகரங்கள்

நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!

Anandakumar🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔