Settings

முகப்பு/விவசாயம்/இப்போது மழை பெய்தாலும் பிழைத்துக் கொள்ளும் நெற்பயிர்கள்!
விவசாயம்

இப்போது மழை பெய்தாலும் பிழைத்துக் கொள்ளும் நெற்பயிர்கள்!

🕒 21 நவ., 2026, 09:44 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
இப்போது மழை பெய்தாலும் பிழைத்துக் கொள்ளும் நெற்பயிர்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •இப்போது மழை பெய்தாலும் பிழைத்துக் கொள்ளும் நெற்பயிர்கள்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொடங்கி கடற்கரைப் பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், தொண்டி வரை உள்ள பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களில் நெல் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்கிற நிலையில் குறிப்பாக வானம் பார்த்த பூமியாக இருந்து வருகிறது. செய்ய வேண்டிய மழை சரியாக பெய்தால் இதே பகுதிகளில் இரண்டு போக நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து வந்திருக்கிறார்கள். கடந்தாண்டு மட்டுமல்லாது இந்த ஆண்டும் வானம் பொய்த்து விட்டதால் விவசாயம் கருகத் தொடங்கி இருக்கிறது. மேலும் வானத்தை நம்பி விவசாயம் செய்வதால் இப்பொழுது விவசாயிகள் நாற்று வளர்த்து நடவு செய்து நெல் விவசாயம் செய்வதை விட கோடை உழவு செய்து கோடை காலத்திலேயே நெல் விதையை விதைத்து விடுவார்கள். லேசான மழை பெய்யும் போது முளைத்து விடும். வறட்சியைத் தாங்கும் தன்மையுடைய இந்த நெற்பயிர்கள் கடும் மழை பெய்யும் போதும் தாங்கி வளரும். அதே நேரத்தில் நல்ல விளைச்சலையும் தரும் என்பதால் காலம் காலமாக இப்பகுதி விவசாயிகள் இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் வானிலை அறிக்கை ஒவ்வொரு நாளும் சொல்லும்போது எப்படியும் இன்று மழை பெய்யும் நாளை மழை பெய்யும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மேலே நாம் குறிப்பிட்டு இருக்கும் பகுதிகளில் மழையே பெய்யவில்லை. இதுவரை இருந்த ஈரத்தில் முளைத்து வளர்ந்திருந்த நெற்பயிர்கள் தற்போது கருகத் தொடங்கி இருக்கின்றன. பாதிக்குமேல் பாதிப்படைந்து விட்டன இன்னும் கொஞ்சநஞ்சம் பயிர்கள் லேசான பச்சையுடன் இருக்கின்றன. இன்று அல்லது நாளை மழை பெய்தாலும் பிழைத்துக் கொள்ளும் என்ற நிலையில் இருக்கிறது. வானம் பொய்த்து விட்டால் புதுக்கோட்டை மாவட்டமே பஞ்சத்தின் பிடியில் சிக்கிவிடும் என்ற நிலையில் இருக்கிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனைவிவசாயம்

தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

NESARAJAN🕒 நவ. 18
இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சுவிவசாயம்

இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சு

SASHVI🕒 நவ. 17
விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!விவசாயம்

விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

D Velmurugan🕒 நவ. 17
திருச்சி விவசாயிகளுக்கு நற்செய்தி: சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!விவசாயம்

திருச்சி விவசாயிகளுக்கு நற்செய்தி: சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

MSD🕒 நவ. 17
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔