Settings

முகப்பு/விவசாயம்/தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனை
விவசாயம்

தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

🕒 18 நவ., 2026, 07:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனை - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருவாரூர் மாவட்டத்தில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெல் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணை திறக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே மூடப்பட்டதாலும், பிரதான ஆறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருப்பதாலும், அங்கிருந்து பிரியும் கிளை மற்றும் குரு வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வதில் தடைய ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட கண்கொடுத்தவணிதம், மேலராதா நல்லூர், திட்டாணிமுட்டம், முசிறியம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு 30 நாட்களான சம்பா நெல் பயிர்கள், பாண்டவையாற்றில் தண்ணீர் இல்லாததால் கருகத் தொடங்கியுள்ளன. போதிய நீரின்றி விவசாய நிலங்கள் பாலம் பாலமாக வெடித்துக் காணப்படுகின்றன.

வடகிழக்கு பருவமழை பெய்த சில நாட்களில் உரம் இட்டு, களை எடுத்து பயிர்களைப் பாதுகாத்து வந்த விவசாயிகளுக்கு, தற்போது நிலவும் வறட்சி பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு இதுவரை 10,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், காவேரி நதிநீர் ஆணையத்தின் மூலம் உரிய தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களை வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விவசாயிகள் மகிழ்ச்சி! விழுப்புரத்தில் தீவிரமடையும் கால்வாய் தூர்வாரும் பணிகள்!விவசாயம்

விவசாயிகள் மகிழ்ச்சி! விழுப்புரத்தில் தீவிரமடையும் கால்வாய் தூர்வாரும் பணிகள்!

Arivazhagan🕒 நவ. 18
இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சுவிவசாயம்

இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சு

SASHVI🕒 நவ. 17
விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!விவசாயம்

விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

D Velmurugan🕒 நவ. 17
திருச்சி விவசாயிகளுக்கு நற்செய்தி: சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!விவசாயம்

திருச்சி விவசாயிகளுக்கு நற்செய்தி: சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

MSD🕒 நவ. 17
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔