Settings

முகப்பு/விவசாயம்/விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக மதிப்பீடு தொழில்நுட்பங்களை வரைபடம் மூலம் விளக்கம்
விவசாயம்

விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக மதிப்பீடு தொழில்நுட்பங்களை வரைபடம் மூலம் விளக்கம்

🕒 21 நவ., 2026, 10:17 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக மதிப்பீடு தொழில்நுட்பங்களை வரைபடம் மூலம் விளக்கம் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக மதிப்பீடு தொழில்நுட்பங்களை வரைபடம் மூலம் விளக்கம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தஞ்சாவூர் மாவட்டம் காட்டுத் தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் ஊரக வேளாண் பணி மேற்கொண்டு வரும் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள், காசநாடுபுதூர் கிராமத்தில் பங்கேற்பு ஊரக மதிப்பீடு தொழில்நுட்பங்களை வரைபடம் மூலம் விளக்கிக் காட்டினர் அதன்படி பருவகால அட்டவணையில் குறுவை, சம்பா மற்றும் தாளடி பருவங்களில் பயிரிடப்படும் நெல் ரகங்கள் மற்றும் அவற்றின் சாகுபடி காலங்களை ஆய்வு செய்தனர். கிராமத்தில் உள்ள இயற்கை, மனித மற்றும் பொருளாதார வளங்களின் இருப்பிடங்களை வரைபடம் மூலம் வெளிப்படுத்தினர் விவசாயிகள் எதிர்கொள்ளும் நீர் பற்றாக்குறை, பூச்சித் தாக்குதல் மற்றும் சேமிப்புக் கிடங்கு தேவை போன்ற பிரச்சனைகளை மரத்தின் உருவம் போல் அமைத்திருந்தனர். மேலும் விவரப்பட்டியலில் கிராம மக்களின் எண்ணிக்கை, ஆண் மற்றும் பெண் விகிதம் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் இடம்பெற்றன. கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகளின் அடிப்படையில் கிராமத்தின் தரத்தை மதிப்பீடு செய்து காட்டினர். கிராம மக்களின் காலை முதல் மாலை வரை உள்ள அன்றாட வாழ்க்கை முறை மற்றும் விவசாய நடவடிக்கைகளை வரைபடமாகினர். குறு, சிறு மற்றும் பெரு விவசாயிகளை வகைப்படுத்தினர் கிராமத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் தொடர்புகளை வரைபடத்தின் அளவு மற்றும் தூரம் மூலம் காட்சிப்படுத்தினர். கிராமத்தில் பயிரிடப்படும் பல்வேறு பயிர்களின் சதவீதப் பங்களிப்பை பிரமிடு வடிவில் எடுத்துரைத்தனர். இந்தக் கிராம ஆய்வின் மூலம் வேளாண் மாணவிகள் கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை, விவசாய நிலை, வளங்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து நேரடி அனுபவத்தையும் நடைமுறை அறிவையும் பெற்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனைவிவசாயம்

தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

NESARAJAN🕒 நவ. 18
இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சுவிவசாயம்

இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சு

SASHVI🕒 நவ. 17
விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!விவசாயம்

விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

D Velmurugan🕒 நவ. 17
திருச்சி விவசாயிகளுக்கு நற்செய்தி: சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!விவசாயம்

திருச்சி விவசாயிகளுக்கு நற்செய்தி: சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

MSD🕒 நவ. 17
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔