மயிலாடுதுறை அருகில் நீடூரில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர்கள் தேவா, சிவசண்முகம், மாவட்ட பொது செயலர் சிவகுமார், மாவட்ட செயலர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் காவிரியில் நீர் வரத்து மற்றும் மழை இல்லாததால் தண்ணீர் இன்றி, நிலத்தடிநீர் மட்டம் குறைந்து குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், தற்போது சம்பாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்., பயிர் காப்பீடு செலுத்திய அனைவருக்கும் பயிர் காப்பீடு தொகையை வழங்க வேண்டும், தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் கொள்ளிடம், காவிரி ஆறு, வீரசோழன் ஆறு, பழவாறு, வெட்டாறு போன்ற ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், சாகுபடி செய்வதற்கு முன்பே குறுவை, சம்பா இருபோகத்திற்கும் ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க கேட்டுக் கொள்வது, நெல் விலையை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்த வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்ட என்பிகேஆர்ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும், குறுவை பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 125க்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயம்
மயிலாடுதுறையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை
🕒 21 நவ., 2026, 10:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •மயிலாடுதுறையில் நடைபெற்ற டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில், மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








