Settings

முகப்பு/நகரங்கள்/கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து! அதிவேக காரால் படுகாயமடைந்த தம்பதி!
நகரங்கள்

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து! அதிவேக காரால் படுகாயமடைந்த தம்பதி!

🕒 24 நவ., 2026, 05:42 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து! அதிவேக காரால் படுகாயமடைந்த தம்பதி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற தம்பதி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சாலையைக் கடக்க முயன்ற கணவன்-மனைவி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பெத்தாம்பாளையம் பகுதியில் உள்ள கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, சேலத்தில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இப்பகுதியில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும், விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் உடனடியாகப் பேரிகார்டுகளை அமைக்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
சந்தையில் லட்சக்கணக்கில் விற்பனையாகும் மாடுகள் மற்றும் குதிரைகள்!நகரங்கள்

சந்தையில் லட்சக்கணக்கில் விற்பனையாகும் மாடுகள் மற்றும் குதிரைகள்!

Srinivasan🕒 நவ. 23
சிவநாம முழக்கத்துடன் தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம்: ஆன்மிக அதிர்வில் உறைந்த தஞ்சை!நகரங்கள்

சிவநாம முழக்கத்துடன் தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம்: ஆன்மிக அதிர்வில் உறைந்த தஞ்சை!

Rajan🕒 நவ. 23
கண்முன்னே கருகும் பயிர்கள்! குடத்தில் தண்ணீர் ஊற்றி காப்பாற்ற போராடும் சோகமான விவசாயிகள்!நகரங்கள்

கண்முன்னே கருகும் பயிர்கள்! குடத்தில் தண்ணீர் ஊற்றி காப்பாற்ற போராடும் சோகமான விவசாயிகள்!

SASHVI🕒 நவ. 23
மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பரிதாப உயிரிழப்பு!நகரங்கள்

மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பரிதாப உயிரிழப்பு!

Ramachandran🕒 நவ. 23
26-ந்தேதி மின்தடை: 32 பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்!செய்திகள்

26-ந்தேதி மின்தடை: 32 பகுதிகளில் 5 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம்!

Rajan🕒 நவ. 24
சிமெண்ட் ஆலை அமைக்க எதிர்ப்பு: VAO அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்செய்திகள்

சிமெண்ட் ஆலை அமைக்க எதிர்ப்பு: VAO அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

Ramkumarsamy🕒 நவ. 24
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தயக்கம் - விஷ்வ ஹிந்து பரிஷத் ஆனந்த் கேள்விஅரசியல்

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தயக்கம் - விஷ்வ ஹிந்து பரிஷத் ஆனந்த் கேள்வி

Ramachandran🕒 நவ. 24
கூலித் தொழிலாளி பெயரில் ரூ.5.53 கோடி ஜிஎஸ்டி மோசடி: வங்கி கணக்கு முடக்கம்!செய்திகள்

கூலித் தொழிலாளி பெயரில் ரூ.5.53 கோடி ஜிஎஸ்டி மோசடி: வங்கி கணக்கு முடக்கம்!

ARAVINDHAN🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔