புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.
விராலிமலை முருகன் கோவில் நீண்டகாலமாகப் பராமரிப்பின்றி இருந்த நிலையில், அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டார். குறிப்பாக, மலைக்கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் வாகனங்கள் எளிதில் சென்று முருகப்பெருமானை தரிசிக்கும் வகையில் மேம்பட்ட சாலை வசதிகள் மற்றும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிப்பட்டனர்.









