Settings

முகப்பு/நகரங்கள்/கல்விக் கடனுதவி பெற்றுள்ள மாணவர்களுக்கு குவியும் வாழ்த்துகள்!
நகரங்கள்

கல்விக் கடனுதவி பெற்றுள்ள மாணவர்களுக்கு குவியும் வாழ்த்துகள்!

🕒 14 நவ., 2026, 06:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கல்விக் கடனுதவி பெற்றுள்ள மாணவர்களுக்கு குவியும் வாழ்த்துகள்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்விக் கடன் முகாமில், 29 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய முதற்கட்ட கல்விக் கடன் முகாம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உயர்கல்வி பயிலும் 29 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டு, அவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

நடப்பு 2026–2027-ஆம் நிதியாண்டில் திருச்சி மாவட்டத்திற்கு மொத்தம் ரூ.140 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி வரை பல்வேறு வங்கிகள் மூலமாக மட்டும் ரூ.70.50 கோடி கல்விக் கடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜூன் மாதம் வரையிலான புள்ளிவிவரங்களின்படி, கல்விக் கடன் வழங்குவதில் திருச்சி மாவட்டம் மாநில அளவில் 4-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த முகாமில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் ராகவன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் துணைப் பொது மேலாளர் சதீஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் பல்வேறு வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்து சிறப்பித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஆம்பூர் நகராட்சியில் ஆட்சியரின் திடீர் ஆய்வு - பாதாளச் சாக்கடைத் திட்டம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்!நகரங்கள்

ஆம்பூர் நகராட்சியில் ஆட்சியரின் திடீர் ஆய்வு - பாதாளச் சாக்கடைத் திட்டம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்!

ARAVINDHAN🕒 நவ. 21
வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!நகரங்கள்

வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Vijay🕒 நவ. 21
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
நெல்லை நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு!செய்திகள்

நெல்லை நயினார் குளத்தில் படகு சவாரி தொடக்கம்: விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

Vijayaragavan🕒 நவ. 22
காதணி விழா சென்று திரும்பியபோது சோகம்: முசிறி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!செய்திகள்

காதணி விழா சென்று திரும்பியபோது சோகம்: முசிறி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

MSD🕒 நவ. 22
பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!செய்திகள்

பக்தி பரவசத்தில் நாகை மாவட்டம்! சொர்ணபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசை!

Sugumaran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔