மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி, விருதுநகரில் அமைப்புசாரா தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசன் ஹோட்டல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாரியப்பன் மற்றும் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொழிலாளர் நலன் சார்ந்த பழைய 44 சட்டங்களை ரத்து செய்து, புதிய 4 சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்த மத்திய அரசின் முடிவுக்குப் போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முக்கிய கோரிக்கைகள்:
- மத்திய அரசின் 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
- தமிழகத்தில் செயல்பட்டு வரும் 36 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களைப் பாதுகாக்க, தமிழக அரசு சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.









