ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த வெங்கநாயக்கன்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாகக் கூடுதல் விலைக்கு மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புளியம்பட்டி காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வெங்கநாயக்கன்பாளையம் முட்புதர் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மது விற்பனை நடந்து வருவது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஆசைத்தம்பி என்பவரைக் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.









