Settings

முகப்பு/விவசாயம்/அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு
விவசாயம்

அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு

🕒 25 நவ., 2026, 01:11 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
அதிக விளைச்சல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவிப்பு - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தமிழ்நாட்டில் பயிர் விளைச்சல் போட்டிகளில் அதிக மகசூல் ஈட்டும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாட்டில் விவசாயிகளின் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் வகையிலும், அதிக விளைச்சலை ஈட்டும் விவசாயிகளை கவுரவிக்கும் வகையிலும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாநில அளவிலான சிறு, குறு விவசாயிகளுக்கான 'மக்கள் சேவை அஞ்சலையம்மாள் விருது' போட்டியானது எள், உளுந்து, நிலக்கடலை மற்றும் பயறு வகைப் பயிர்களில் நடத்தப்படுகிறது. இதில் தமிழ்நாடு அளவில் பயிர் வாரியாக அதிக மகசூல் ஈட்டி முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ.2.50 லட்சமும், இரண்டாம் இடம்பிடிப்பவருக்கு ரூ.1.50 லட்சமும், மூன்றாம் இடம்பிடிப்பவருக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

அதேபோல், மாவட்ட அளவிலான வெற்றி விவசாயி விருது போட்டிகள் நெல் மற்றும் பாசிப்பயறு பயிர்களில் நடத்தப்படுகின்றன. இதில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ.50,000-மும், இரண்டாம் இடம் பெறும் விவசாயிக்கு ரூ.25,000-மும் வழங்கப்படும்.

மேலும், மாநில அளவிலான 'சி.நாராயணசாமிநாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருதுப் போட்டி' திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து அதிக மகசூல் ஈட்டும் விவசாயிகளுக்காக நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் விவசாயிக்கு விருதுடன் கூடிய சிறப்புப் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 3 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சன்னரக நெல் ரகங்களைச் சாகுபடி செய்திருக்க வேண்டும்.

'பாரத ரத்னா எம்.ஜி.ஆர் பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாப்பு விருது' போட்டியில், பாரம்பரிய நெற்பயிரில் அதிக மகசூல் ஈட்டி முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். இப்போட்டிகளில் பங்கேற்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 ஏக்கரில் பாரம்பரிய முறையில் சாகுபடி செய்திருக்க வேண்டும். குத்தகைதாரர்களும் இப்போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள் ஆவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, பதிவுக் கட்டணமாக ரூ.150-ஐ தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் செலுத்திப் பதிவு செய்ய வேண்டும். இக்கட்டணம் திரும்பத் தரப்பட மாட்டாது.

விண்ணப்பத்துடன் பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்று ஆவணங்களான பதிவுக் கட்டணம் செலுத்திய ரசீது, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, நில வரைபடம், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் மின்னணு பயிர் கணக்கீடு சான்று நகல் ஆகியவற்றை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விவசாயிகள் மகிழ்ச்சி! விழுப்புரத்தில் தீவிரமடையும் கால்வாய் தூர்வாரும் பணிகள்!விவசாயம்

விவசாயிகள் மகிழ்ச்சி! விழுப்புரத்தில் தீவிரமடையும் கால்வாய் தூர்வாரும் பணிகள்!

Arivazhagan🕒 நவ. 18
தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனைவிவசாயம்

தண்ணீர் இன்றி கருகும் ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள்: விவசாயிகள் வேதனை

NESARAJAN🕒 நவ. 18
இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சுவிவசாயம்

இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரடியாகச் சேரும் மானியங்கள்: மயிலாடுதுறையில் அமைச்சர் பேச்சு

SASHVI🕒 நவ. 17
விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!விவசாயம்

விவசாயிகளுக்கு நற்செய்தி: நெல் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

D Velmurugan🕒 நவ. 17
தலையில் துண்டு, மடிப்பிச்சை ஏந்திய விவசாயிகள்... மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்!செய்திகள்

தலையில் துண்டு, மடிப்பிச்சை ஏந்திய விவசாயிகள்... மயிலாடுதுறையில் பரபரப்பு போராட்டம்!

SASHVI🕒 நவ. 25
அரசு பேருந்து மோதி மளிகை கடை உரிமையாளர் படுகாயம்!நகரங்கள்

அரசு பேருந்து மோதி மளிகை கடை உரிமையாளர் படுகாயம்!

Dinesh🕒 நவ. 25
முட்புதர் மறைவில் மது விற்பனை! ஈரோட்டில் அதிரடி கைது!செய்திகள்

முட்புதர் மறைவில் மது விற்பனை! ஈரோட்டில் அதிரடி கைது!

Dinesh🕒 நவ. 25
காவல் நிலைய மரணம்: நீதி கேட்டு நிற்போம் - சிபிஐ விசாரணைக்கு கனிமொழி அதிரடி கோரிக்கை!செய்திகள்

காவல் நிலைய மரணம்: நீதி கேட்டு நிற்போம் - சிபிஐ விசாரணைக்கு கனிமொழி அதிரடி கோரிக்கை!

Vijay🕒 நவ. 25
TNO வாட்ஸ்அப் சானல் ➔