Settings

முகப்பு/செய்திகள்/அம்பாசமுத்திரத்தில் வென்றால் தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்றுவேன் - சீமான் முழக்கம்
செய்திகள்

அம்பாசமுத்திரத்தில் வென்றால் தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்றுவேன் - சீமான் முழக்கம்

🕒 26 நவ., 2026, 12:06 PM
⏱️ 3 நிமிடம் வாசிப்பு
அம்பாசமுத்திரத்தில் வென்றால் தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்றுவேன் - சீமான் முழக்கம் - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •அம்பாசமுத்திரத்தில் வெற்றி பெற்றால் தமிழகத்தின் சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழர் எழுச்சி நாள் விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிபடத் தெரிவித்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழர் எழுச்சி நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றால் தமிழகத்தின் சிறந்த தொகுதியாக அதை மாற்றி காட்டுவேன் என உறுதிபடத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய சீமான், பிரபாகரனின் சாதனைகள் மற்றும் அவருடன் நிகழ்ந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். உலகின் எந்தத் தலைமைப் பண்புக்கும் பொருந்தக்கூடிய தலைவராகப் பிரபாகரன் விளங்கினார் என்றும், தன்னை எரித்துக்கொள்ளும் மெழுகுவர்த்தியைப் போல மக்களுக்காக வாழ்ந்தவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தாய்மொழி மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "தமிழர்கள் ஒரு காலத்தில் தெற்காசியா முழுவதும் நிறைந்து வாழ்ந்தனர்; ஆனால், இன்று சொந்த நிலத்தில்கூட இடமில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தாய்மொழி நிராகரிக்கப்படும் இடத்தில் ஒரு இனத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. தமிழில் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரியாத இளைஞர்கள் உருவாகி வருகின்றனர். நாட்டை ஆள்பவர்களுக்கே தமிழ் பேசத் தெரியவில்லை. தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசும் நிலை அதிகரித்து, 90 சதவீதத்திற்கும் அதிகமாக ஆங்கிலம் கலந்தே தமிழ் பேசப்படுகிறது. தாய்மொழியை இழந்த இனங்கள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை" என்றார். விழாவின் ஒரு பகுதியாக, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவச இணையவழிக் கல்வி மற்றும் பயிற்சி வழங்கும் 'தமி்த் தலைவன் இலவச இணையவழிக் கல்வித் திட்டத்தை' அவர் தொடங்கி வைத்தார். புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்திய அவர், நாம் தமிழர் கட்சிக் கூட்டங்களில் மட்டுமே புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இளைஞர்கள் புத்தகங்களை வாங்கி கையெழுத்துப் பெற்றுச் செல்வதைப் பார்க்கும்போது வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தின் இயற்கை வளங்கள் தடையின்றி பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீமான், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு என்ன வளங்கள் வருகின்றன எனக் கேள்வி எழுப்பினார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு அணை கட்டியே தீருவோம் எனக் கூறும் நிலையில், தமிழக அரசு உரிய எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்றார். மேலும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தைத் தன்னிடம் ஒப்படைத்தால் ஒரு மணி நேரத்தில் தீர்வு காண்பேன் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தனி விமானப் பயணம் மற்றும் அரசின் விளம்பரச் செலவுகளையும் விமர்சித்தார். நலத்திட்டங்களை மக்களுக்குச் செய்வதற்கு எதற்காக விளம்பரம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர், திராவிட அரசியலைவிட மோசமான அருவருக்கத்தக்க தேர்தல் அரசியலை தவெகவினர் முன்னெடுக்கின்றனர் என விமர்சித்தார். தன் மீது திரள் நிதியைத் திருடியதாகக் கூறப்படுவதை முற்றிலுமாக மறுத்த அவர், "திரையரங்குகளில் பிளாக் டிக்கெட் மூலமாகப் பணம் சம்பாதித்தவர்கள் எல்லாம் திரள்நிதி குறித்துப் பேசுகிறார்கள். தேர்தலில் பணம், பதவி ஆகியவற்றுக்காகக் கூட்டணி அமைக்கவில்லை. எனக்கு வாக்களித்த 20 லட்சம் பேர் பணம், சாராயம், பரிசுப் பொருட்களைப் புறக்கணித்துவிட்டு கொள்கைக்காக வாக்களித்தவர்கள். தேர்தலில் கூட்டணிக்கு நான் சம்மதிக்கவில்லை; என்னை சம்மதிக்க வைக்க எனது மனைவியிடம் பேசினார்கள். ஆனால் அவரோ, 'தோற்றுக்கூடப் போங்கள், கூட்டணி வைக்காதீர்கள்' எனத் தெரிவித்துவிட்டார்" என்று பெருமிதத்துடன் கூறினார். அம்பாசமுத்திரம் தொகுதி குறித்துப் பேசிய சீமான், "அங்கு பணமும் அதிகாரமும் வைத்து எப்படியாவது வெற்றி பெற சிலர் முயற்சிக்கின்றனர். நான் தெரு தெருவாகச் சென்று மக்களின் மனங்களை வென்று சட்டமன்றத்திற்குச் செல்ல விரும்புகிறேன். பண பலத்தையும் அதிகார பலத்தையும் வைத்துக்கொண்டு தொகுதியைச் சுற்றி வந்து வெற்றி பெற நினைக்கின்றனர். தமிழக முதலமைச்சர் பல இடங்களில் ரோட் ஷோ செல்வது போல, அம்பாசமுத்திரத்திற்கும் நிச்சயமாக வருவார்; என்னைத் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பக் கூடாது என்பதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்வார்கள். அம்பாசமுத்திரத்தில் சீமான் பொது வேட்பாளர் என்றதும் ஏன் அலறுகிறார்கள்? நான் மட்டுமல்ல, எனது கட்சியைச் சார்ந்த அனைவருமே பொது வேட்பாளர்கள் தான். அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றால், அதனைத் தமிழகத்தின் மட்டுமின்றி இந்தியாவின் சிறந்த தொகுதியாக மாற்றி காட்டுவேன்" எனத் தெரிவித்தார். அரசியலில் கொள்கை உறுதியுடன் செயல்படுவோம் என்றும், கடைசி நேரம் வரை போராடி வெற்றி பெறுவோம் என்றும் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பியபோது சோகம்: கழிவறையில் காவலர் சடலம்!செய்திகள்

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணி முடிந்து திரும்பியபோது சோகம்: கழிவறையில் காவலர் சடலம்!

Manimaran🕒 நவ. 26
சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!செய்திகள்

சாக்லேட் வடிவில் போதைப்பொருள்! திருச்சி ரயில் நிலையத்தில் அதிரடி பறிமுதல்!

MSD🕒 நவ. 26
மின்கசிவால் கேஸ் ஆபீஸ் எரிந்து நாசம்: 2 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!நகரங்கள்

மின்கசிவால் கேஸ் ஆபீஸ் எரிந்து நாசம்: 2 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு!

Srinivasan🕒 நவ. 26
தொழில் முனைவோருக்கு குட் நியூஸ்: ரூ.31.14 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது!தமிழ்நாடு

தொழில் முனைவோருக்கு குட் நியூஸ்: ரூ.31.14 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது!

JOWIN AKASH🕒 நவ. 26
200 ஆண்டு பழமையான நாணயங்கள் மற்றும் தபால் தலைகள்: ஈரோட்டில் அசத்தல் கண்காட்சி!நகரங்கள்

200 ஆண்டு பழமையான நாணயங்கள் மற்றும் தபால் தலைகள்: ஈரோட்டில் அசத்தல் கண்காட்சி!

Dinesh🕒 நவ. 26
வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!நகரங்கள்

வாயில்லா ஜீவனின் அழும் தாய்ப்பாசம்! திருப்பத்தூரில் வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி!

ARAVINDHAN🕒 நவ. 26
ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் திரண்ட விவசாயிகள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!தமிழ்நாடு

ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல்லில் திரண்ட விவசாயிகள்: ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

SRIDHAR🕒 நவ. 26
ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்அரசியல்

ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லட்சிய ஜனநாயக கட்சி! அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்

SASHVI🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔