Settings

முகப்பு/ஆன்மீகம்/பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாகத் தொடங்கியது மயிலாடுதுறை சவேரியார் ஆலய திருவிழா!
ஆன்மீகம்

பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாகத் தொடங்கியது மயிலாடுதுறை சவேரியார் ஆலய திருவிழா!

🕒 24 நவ., 2026, 03:14 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாகத் தொடங்கியது மயிலாடுதுறை சவேரியார் ஆலய திருவிழா! - படம் 1 - The News Outlook
📸1 / 7
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (7)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் ஆண்டுத் பங்குத் திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. இதில் திரளான இறைமக்கள் பங்கேற்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் ஆண்டுப் பங்குத் திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.

மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு. தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. இந்த பவனியை உதவிப்பங்குத்தந்தை வால்டர் அடிகளார் வழிநடத்தினார். அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் திரு இருதய ஆண்டவர் அருட்தந்தையர் ஓய்வு இல்ல பொன்விழா தந்தை அருட்திரு. பிலோமின்ராஜ் அடிகளார் கொடியைப் புனிதம் செய்து, புனித சவேரியாரின் திருஉருவப் படம்கொண்ட கொடியை ஏற்றி திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. “இதோ நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்ற இறைவார்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற இத்திருப்பலியில், உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், நோய்த்தொற்று முற்றிலும் ஒழியவும் சிறப்புப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்திருப்பலியில் தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகி அருட்தந்தை ஆரோன் அடிகளார், கூறைநாடு பங்குத்தந்தை அருட்திரு. தேவதாஸ் அடிகளார் மற்றும் ஏராளமான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், மரியாயின் சேனையினர், அன்பியக் குழுவினர், பாடகற்குழுவினர் மற்றும் திரளான இறைமக்கள் கலந்துகொண்டனர்.

பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்தத் திருவிழாவில், தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை மற்றும் திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிறப்புத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 3-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
1 டன் மலர்கள், 200 அடி மாலை: திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கும் தீப திருவிழா!ஆன்மீகம்

1 டன் மலர்கள், 200 அடி மாலை: திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கும் தீப திருவிழா!

Srinivasan🕒 நவ. 24
கார்த்திகை முதல் சோமவாரம்: தில்லையாடி கோயிலில் கோலாகலமாக நடந்த சங்காபிஷேகம்ஆன்மீகம்

கார்த்திகை முதல் சோமவாரம்: தில்லையாடி கோயிலில் கோலாகலமாக நடந்த சங்காபிஷேகம்

SASHVI🕒 நவ. 23
பக்தர்களைப் மெய்சிலிர்க்க வைத்த மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் 1008 சங்காபிஷேகம்!ஆன்மீகம்

பக்தர்களைப் மெய்சிலிர்க்க வைத்த மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் 1008 சங்காபிஷேகம்!

SASHVI🕒 நவ. 23
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் பலியா? திருச்சி அரசு மருத்துவமனை முன்பு அதிரடி சாலை மறியல்!செய்திகள்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் பலியா? திருச்சி அரசு மருத்துவமனை முன்பு அதிரடி சாலை மறியல்!

MSD🕒 நவ. 24
தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!இந்தியா

தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!

Srinivasan🕒 நவ. 24
மிருகங்களைப் போல குப்பை வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்! கொதித்தெழுந்த ஊழியர்கள்!செய்திகள்

மிருகங்களைப் போல குப்பை வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள்! கொதித்தெழுந்த ஊழியர்கள்!

SASHVI🕒 நவ. 24
சதுரகிரி மலையேற அனுமதி: கார்த்திகை பௌர்ணமி சிறப்பு தரிசனத்தில் திரண்ட பக்தர்கள்!செய்திகள்

சதுரகிரி மலையேற அனுமதி: கார்த்திகை பௌர்ணமி சிறப்பு தரிசனத்தில் திரண்ட பக்தர்கள்!

Ramkumarsamy🕒 நவ. 24
உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரிக்க முயற்சி! திருச்சியில் அதிரடி கைது!செய்திகள்

உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை எரிக்க முயற்சி! திருச்சியில் அதிரடி கைது!

MSD🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔