Settings

முகப்பு/விளையாட்டு/பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!
விளையாட்டு

பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!

🕒 15 நவ., 2026, 07:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்! - படம் 1 - The News Outlook
📸1 / 7
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (7)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கரூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோர் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூர் தாந்தோணிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப் போட்டியை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ஆகியோர் தலைமை தாங்கி, ஓட்டப் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

இந்தப் போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அதன்படி, 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் ஓடும் போட்டி நடத்தப்பட்டது. மேலும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டரும், பெண்களுக்கு 5 கிலோமீட்டரும் என நெடுந்தூர ஓட்டப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன்படி, முதல் பரிசாக ரூ.5,000 வீதம் 4 பேருக்கும், இரண்டாவது பரிசாக ரூ.3,000 வீதம் 4 பேருக்கும், மூன்றாவது பரிசாக ரூ.2,000 வீதம் 4 பேருக்கும் வழங்கப்பட்டது. மேலும், 4 முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் 28 நபர்களுக்கு பரிசுத் தொகையும், சான்றிதழ்களும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!விளையாட்டு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்!

NESARAJAN🕒 நவ. 18
மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!விளையாட்டு

மாநில அளவிலான சிலம்பம் போட்டி: தேவலாபுரம் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்!

Srinivasan🕒 நவ. 18
உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!விளையாட்டு

உலக தாய் பாக்சிங் சாம்பியன்ஷிப்: பதக்கங்களுடன் தமிழகம் திரும்பிய வீரர்களுக்கு நாமக்கல்லில் உற்சாக வரவேற்பு!

SRIDHAR🕒 நவ. 17
சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!விளையாட்டு

சிலம்பக் கலையை வளர்க்க தனி நிதி ஒதுக்கீடு கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பு!

Vijayaragavan🕒 நவ. 17
வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!செய்திகள்

வால்பாறையில் உலா வந்த கொம்பன் யானை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

S. Ravichandran🕒 நவ. 22
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔