Settings

முகப்பு/நகரங்கள்/திருச்சியில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: என்.எஸ்.பி. சாலையில் அதிகாரிகள் அதிரடி!
நகரங்கள்

திருச்சியில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: என்.எஸ்.பி. சாலையில் அதிகாரிகள் அதிரடி!

🕒 5 நவ., 2026, 04:35 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருச்சியில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: என்.எஸ்.பி. சாலையில் அதிகாரிகள் அதிரடி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருச்சி என்.எஸ்.பி. சாலையில் நீதிமன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்த 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாற்று இடங்கள் வழங்கப்பட்டன.

இருப்பினும், மாற்று இடங்களில் போதிய வியாபாரம் இல்லை எனக் கூறி, தீபாவளி பண்டிகை முடியும் வரை என்.எஸ்.பி. சாலையில் வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி மாநகராட்சி நிர்வாகம் இதற்கு அனுமதி மறுத்தது. இதனை மீறி, ஒருசில வியாபாரிகள் தள்ளுவண்டிகள் மற்றும் தரைக் கடைகளை அமைத்து என்.எஸ்.பி. சாலையில் வியாபாரம் செய்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி ஆய்வில், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 5 தள்ளுவண்டிக் கடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 10-க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இனிவரும் காலங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔