இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் மாபெரும் வெற்றி பெறக் கோரி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனை மேற்கொண்டார்.
நயன்தாரா நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் வெற்றி மற்றும் வெற்றிகரமான படப்பிடிப்பை வேண்டி இயக்குநர் விக்னேஷ் சிவன் திருவண்ணாமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக, உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலில் அவர் மனமுருகிச் சாமி கும்பிட்டார்.









