திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி மன்றக் கூட்டம் இன்று நகர மன்றத் தலைவர் ஏ. ஜாஸ் அஹமத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகராட்சிப் பகுதிகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வார்டு கவுன்சிலர் ஒருவர் தனது பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் மக்களின் கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனக் கூறி, அவர் திடீரெனக் கூட்ட அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.கவுன்சிலரின் இந்த திடீர் போராட்டத்தால் நகராட்சி மன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நகரங்கள்
ஆம்பூர் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
🕒 30 அக்., 2026, 08:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •ஆம்பூர் நகர மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








