தென் கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று 31ஆம் தேதி விஜயபுரத்திலிருந்து சுமார் 330 கிலோமீட்டர் மேற்கு தென்மேற்கிலும் நிக்கோபாரில் இருந்து 300 கிலோமீட்டர் மேற்கு வட மேற்கு திசையிலும் சென்னையிலிருந்து 1140 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கினும் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து 1200 கிலோமீட்டர் தென்கிழக்கிலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு மேற்கு மத்திய வங்காள விரிகுடா அதன் ஒட்டிய பகுதிகளில் மேலும் வலுப்பெற்று புயலாக மாரி நவம்பர் இரண்டாம் தேதி ஆந்திர பிரதேச கடற்கரையில் அருகில் உள்ள மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியை அடைய வாய்ப்பு உள்ளதால் தூரத்து புயல் எச்சரிக்கையாக பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு துறைமுக அதிகாரிகளால் ஏற்றப்பட்டது
நகரங்கள்
பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
🕒 31 அக்., 2026, 12:26 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •*பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் தூரத்து புயல் எச்சரிக்கையாக முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு துறைமுக அதிகாரிகளால் ஏற்றம்*
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








