விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு, பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து பத்திர எழுத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இந்த முழு அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.









