Settings

முகப்பு/நகரங்கள்/மயிலாடுதுறையில் பக்தி பரவசம்! மாயூரநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
நகரங்கள்

மயிலாடுதுறையில் பக்தி பரவசம்! மாயூரநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

🕒 15 நவ., 2026, 09:36 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மயிலாடுதுறையில் பக்தி பரவசம்! மாயூரநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம் - படம் 1 - The News Outlook
📸1 / 7
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (7)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஶ்ரீ அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயிலில், காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான இக்கோயிலில், ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் கடந்த அக்டோபர் 18-ம் தேதி தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஶ்ரீ அபயாம்பிகை சமேத ஶ்ரீ மாயூரநாதர், வள்ளி-தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணியர், விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.

திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தேரோட்டத்தை வடம் பிடித்துத் தொடங்கி வைத்தார். சிவ கைலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் மற்றும் தேவார இன்னிசையுடன், நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் சூழ, ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ஓம் நமசிவாய' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேர்கள் நிலையை அடைந்தன.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹபிரியா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. துலா உற்சவத்தின் உச்சகட்ட நிகழ்வான 'கடைமுக தீர்த்தவாரி' நாளை நடைபெற உள்ளது. இதில் காவிரியின் இரு கரைகளிலும் உள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற உள்ளது, இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔