புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பேராம்பூர் ஊராட்சியில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட ஆதி லிங்கேஸ்வரர் கோயிலில் பூஜை நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.
பேராம்பூர் ஊராட்சியில் அண்மையில் ஆதி லிங்கேஸ்வரர் கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் கோயிலில் வழிபாடுகள் மேற்கொள்ள இந்து அமைப்பினர் மற்றும் கிராம மக்கள் முயன்றபோது, அப்பகுதி நில உரிமையாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, அப்பகுதியில் கிரிவலம் நடத்த கிராம மக்களும், இந்து முன்னணி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளும் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி கிரிவலத்தை நடத்துவது குறித்து அப்பகுதி மக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியதுடன், கண்டெடுக்கப்பட்ட சிவனுக்கு சிறப்பு பூஜைகளையும் செய்தனர்.









