Settings

முகப்பு/நகரங்கள்/குளம்போல் தேங்கிய மழைநீர்.. சேறும் சகதியுமான சாலைகளால் தவிக்கும் மக்கள்!
நகரங்கள்

குளம்போல் தேங்கிய மழைநீர்.. சேறும் சகதியுமான சாலைகளால் தவிக்கும் மக்கள்!

🕒 26 நவ., 2026, 03:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குளம்போல் தேங்கிய மழைநீர்.. சேறும் சகதியுமான சாலைகளால் தவிக்கும் மக்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருச்சி மாவட்டம் வேங்கூர் ஊராட்சியில் மழைநீர் தேங்கி சேதமடைந்த சாலைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேறும் சகதியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

மழைக்காலங்களில் இப்பகுதியில் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. சாலைகளைச் சீரமைக்கக் கோரியும், மழைநீர் தேங்குவதைத் தடுக்கக் கோரியும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் தேங்கி நிற்கும் கழிவுநீர் மற்றும் மழைநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்குச் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்றுகள் பரவி வருகின்றன. மேலும், சேதமடைந்த சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடையும் அவலமும் தொடர்கிறது.

எனவே, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றவும், சேதமடைந்த சாலைகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கலசப்பாக்கம் மிருகண்டா நதி அணை நிலவரம்: முழு விவரம் இதோ!நகரங்கள்

கலசப்பாக்கம் மிருகண்டா நதி அணை நிலவரம்: முழு விவரம் இதோ!

Manimaran🕒 நவ. 26
75 சதவீதத்தை கடந்த செண்பகத் தோப்பு அணை நீர் இருப்பு! இன்றைய நிலவரம்!நகரங்கள்

75 சதவீதத்தை கடந்த செண்பகத் தோப்பு அணை நீர் இருப்பு! இன்றைய நிலவரம்!

Manimaran🕒 நவ. 26
தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!நகரங்கள்

தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Dinesh🕒 நவ. 26
பனிமலையாக மாறிய ஆம்பூர்! தேசிய நெடுஞ்சாலையை மூடிய பனிமூட்டம் - ஷாக் ஆன வாகன ஓட்டிகள்!நகரங்கள்

பனிமலையாக மாறிய ஆம்பூர்! தேசிய நெடுஞ்சாலையை மூடிய பனிமூட்டம் - ஷாக் ஆன வாகன ஓட்டிகள்!

ARAVINDHAN🕒 நவ. 26
தரங்கம்பாடியில் மணலில் உருவான டேனிஷ் கோட்டை: வைரலாகும் மணல் சிற்பம்!செய்திகள்

தரங்கம்பாடியில் மணலில் உருவான டேனிஷ் கோட்டை: வைரலாகும் மணல் சிற்பம்!

SASHVI🕒 நவ. 26
தவெக பிரமுகர் கார் கண்ணாடிகள் உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!தமிழ்நாடு

தவெக பிரமுகர் கார் கண்ணாடிகள் உடைப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

JOWIN AKASH🕒 நவ. 26
நலவாரியங்களை முடக்காதே! விருதுநகரில் திரண்ட அமைப்புசாரா தொழிலாளர்கள்செய்திகள்

நலவாரியங்களை முடக்காதே! விருதுநகரில் திரண்ட அமைப்புசாரா தொழிலாளர்கள்

Ramkumarsamy🕒 நவ. 26
நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.பல லட்சம் மதிப்பிலான 4,428 கடல் சங்குகள் அழிப்பு!செய்திகள்

நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.பல லட்சம் மதிப்பிலான 4,428 கடல் சங்குகள் அழிப்பு!

Vijayaragavan🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔