தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்யத் தொடங்கியது. ஈரோடு மாநகரப் பகுதிகளான பன்னீர்செல்வம் பூங்கா, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், கனி ராவுத்தர் குளம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதேபோல், புறநகர்ப் பகுதிகளான சித்தோடு, கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. மாலை நேரங்களில் தொடர்ந்து விட்டுவிட்டு பெய்து வரும் இந்த மழையின் காரணமாக, பணி முடிந்து வீடு திரும்புவோர் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும், தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்து வரும் இந்த மழையால் கோடை வெயில் தணிந்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் சற்று மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
நகரங்கள்
தொடர் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
🕒 26 நவ., 2026, 02:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரங்களில் தொடர் மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








