இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D.N. ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப., அவர்கள் இன்று (நவம்பர் 10, 2026) மாலை 16.30 மணியளவில், மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் காவல்துறை வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, வாகனங்களின் பராமரிப்பு நிலை, இயக்கத் தகுதி மற்றும் அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில் அவற்றின் செயல்பாட்டுத் திறன் ஆகியவை குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், அனைத்து வாகனங்களையும் எப்போது இயக்கத் தகுதியுடனும், சிறந்த முறையில் பாதுகாப்பாகவும் பராமரிக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் அவர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.









