Settings

முகப்பு/நகரங்கள்/மாணவர்களின் அறிவியல் திறமைக்கு அங்கீகாரம்: புதுக்கோட்டையில் களைகட்டிய கண்காட்சி!
நகரங்கள்

மாணவர்களின் அறிவியல் திறமைக்கு அங்கீகாரம்: புதுக்கோட்டையில் களைகட்டிய கண்காட்சி!

🕒 16 நவ., 2026, 09:13 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மாணவர்களின் அறிவியல் திறமைக்கு அங்கீகாரம்: புதுக்கோட்டையில் களைகட்டிய கண்காட்சி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்டக் கல்வி அலுவலர் ராஜூ முன்னிலை வகித்து தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை வகித்து கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், "வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்பது மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும்" என்று வலியுறுத்தினார்.

இந்தக் கண்காட்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், தனி மற்றும் குழு பிரிவுகளில் தங்கள் அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். மேலும், ஆசிரியர்களின் புதுமையான படைப்புகளும் இடம்பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில், பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் கண்ணன், செந்தில்குமார், அடைக்கன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றி படைப்புகளை மதிப்பீடு செய்தனர். இந்நிகழ்வில் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர் மல்லிகா, பள்ளித் துணை ஆய்வாளர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாவட்டக் கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகள், வரும் 20-ம் தேதி புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ள வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்!நகரங்கள்

40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்!

ARAVINDHAN🕒 நவ. 23
கார்த்திகை தீபம் நெருங்கும் நிலையில் திருப்பத்தூரில் களைகட்டிய அகல்விளக்குகள் மற்றும் பூக்கள் விற்பனை!நகரங்கள்

கார்த்திகை தீபம் நெருங்கும் நிலையில் திருப்பத்தூரில் களைகட்டிய அகல்விளக்குகள் மற்றும் பூக்கள் விற்பனை!

ARAVINDHAN🕒 நவ. 23
இறுதிச் சடங்கில் கொடூர கொலை: திருப்பத்தூரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!நகரங்கள்

இறுதிச் சடங்கில் கொடூர கொலை: திருப்பத்தூரில் அதிரடி நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!

ARAVINDHAN🕒 நவ. 23
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!

Sugumaran🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பா.ம.க. மற்றும் உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்செய்திகள்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பா.ம.க. மற்றும் உழவர் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

SASHVI🕒 நவ. 23
டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணிசெய்திகள்

டெங்குவை விரட்ட களத்தில் இறங்கிய சுகாதாரத் துறை: திருவண்ணாமலையில் விழிப்புணர்வு பணி

Manimaran🕒 நவ. 23
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி: நில அபகரிப்பு புகாரால் பரபரப்புசெய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி: நில அபகரிப்பு புகாரால் பரபரப்பு

Muralidharan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔