Settings

முகப்பு/செய்திகள்/மாநில உறைவாள் போட்டி: 2 தங்கம் வென்று தஞ்சை மாணவி சாதனை!
செய்திகள்

மாநில உறைவாள் போட்டி: 2 தங்கம் வென்று தஞ்சை மாணவி சாதனை!

🕒 23 நவ., 2026, 11:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மாநில உறைவாள் போட்டி: 2 தங்கம் வென்று தஞ்சை மாணவி சாதனை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி எஸ்.தர்ஷினி, மாநில உறைவாள் போட்டியில் இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்து இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மாநில அளவிலான உறைவாள் போட்டியில், தஞ்சாவூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி எஸ்.தர்ஷினி இரண்டு பிரிவுகளில் முதலிடம் பிடித்து இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 17-வது மாநில அளவிலான உறைவாள் போட்டி நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 400 மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.தர்ஷினி (18) பங்கேற்றார். கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் இவர், 65 கிலோவுக்கு உட்பட்ட எடைப் பிரிவின் சண்டைப் பிரிவு (Fight) மற்றும் கட்டாப் பிரிவு (Kata) ஆகிய இரண்டிலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் அவர் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவி தர்ஷினியை, பசுமை சித்தரும் தமிழ்நாடு உறைவாள் சங்க அமைப்பாளருமான எஸ்.குணசேகரன், தலைவர் ஜி.செல்வராஜ், செயலாளர் எஸ்.செல்வம், பொருளாளர் அருள்செல்வி மற்றும் முதன்மை நடுவர் சையது முகமது பிலால் உள்ளிட்டோர் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மாநில அளவிலான இந்தப் போட்டியில் முத்திரை பதித்துள்ள மாணவி தர்ஷினி, வரும் ஜனவரி மாதம் 11 முதல் 14 ஆம் தேதி வரை ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான உறைவாள் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2 பேர் கைது!செய்திகள்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: 2 பேர் கைது!

VASANTHA🕒 நவ. 23
வங்கி ஊழியர்களின் மிரட்டலால் மகன் தற்கொலை... சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயன்ற சோகம்!செய்திகள்

வங்கி ஊழியர்களின் மிரட்டலால் மகன் தற்கொலை... சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய் தீக்குளிக்க முயன்ற சோகம்!

Muralidharan🕒 நவ. 23
சிறுமி வழக்கு: தாயின் உருக்கமான கண்ணீர் வேண்டுகோள்!செய்திகள்

சிறுமி வழக்கு: தாயின் உருக்கமான கண்ணீர் வேண்டுகோள்!

Arivazhagan🕒 நவ. 23
அதிர்ச்சி: கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் பெட்ரூமுக்கு தீ வைத்த மர்ம கும்பல்!செய்திகள்

அதிர்ச்சி: கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் பெட்ரூமுக்கு தீ வைத்த மர்ம கும்பல்!

Vijayaragavan🕒 நவ. 23
கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் நியாய விலைக் கடை ஊழியர்கள் அதிரடி போராட்டம்!

Ramkumarsamy🕒 நவ. 23
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!நகரங்கள்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்: மக்கள் ஏமாற்றம்!

Anandakumar🕒 நவ. 23
கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!நகரங்கள்

கணவருடன் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி - கரூர் கலவரம்!

Anandakumar🕒 நவ. 23
முயல் வேட்டையாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபருக்கு ரூ.25,000 அபராதம்!செய்திகள்

முயல் வேட்டையாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வாலிபருக்கு ரூ.25,000 அபராதம்!

Vijayaragavan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔