சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள பாணாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி நாளையப்பன் என்பவர் இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது தம்பி குடும்பத்தினர் தங்களது நிலத்தை அபகரிக்க முயல்வதாகவும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நில அபகரிப்பு மற்றும் மிரட்டல் குறித்து மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நாளையப்பன் வேதனை தெரிவித்தார். உரிய நீதி கிடைக்காத காரணத்தினால் விரக்தியடைந்து இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டதாக அவர் கூறினார்.









