Settings

முகப்பு/நகரங்கள்/கோயில் புனிதத்தன்மைக்கு களங்கம்! செருப்புடன் வலம் வந்த அமைச்சரும் அதிகாரிகளும்!
நகரங்கள்

கோயில் புனிதத்தன்மைக்கு களங்கம்! செருப்புடன் வலம் வந்த அமைச்சரும் அதிகாரிகளும்!

🕒 10 நவ., 2026, 08:10 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோயில் புனிதத்தன்மைக்கு களங்கம்! செருப்புடன் வலம் வந்த அமைச்சரும் அதிகாரிகளும்! - படம் 1 - The News Outlook
📸1 / 6
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (6)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கரூர் மாவட்டம் திருமுக்கூடலூர் அகத்தீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகளை அமைச்சர் ராஜேஷ்குமார் செருப்பு அணிந்து ஆய்வு செய்த விவகாரம் பக்தர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூர் மாவட்டம், மன்மங்கலம் வட்டம், திருமுக்கூடலூர் அருள்மிகு அகத்தீஸ்வரர் உடனுறை அஞ்சநாச்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்நிலையில், பழமை வாய்ந்த திருக்கோயில் வளாகத்திற்குள் அமைச்சர் ராஜேஷ்குமார் செருப்பு அணிந்தபடி சென்று ஆய்வு நடத்தியது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அவருடன் சென்ற மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தவெக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பலரும் காலணிகளுடன் கோயிலுக்குள் வலம் வந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர்களில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மட்டும் செருப்பு அணியாமல் கோயிலுக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாகக் குறைந்த முட்டை விலை!செய்திகள்

முட்டை பிரியர்களுக்கு குட் நியூஸ்: அதிரடியாகக் குறைந்த முட்டை விலை!

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔