Settings

முகப்பு/நகரங்கள்/அரியலூரில் திரண்ட இளைஞர்கள்: அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
நகரங்கள்

அரியலூரில் திரண்ட இளைஞர்கள்: அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

🕒 15 நவ., 2026, 05:04 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரியலூரில் திரண்ட இளைஞர்கள்: அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •அரியலூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தொடங்கி வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற 'அறிஞர் அண்ணா மாரத்தான்' நெடுந்தூர ஓட்டப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ந. மிருணாளினி, இ.ஆ.ப., கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டியில், இந்த ஆண்டு 400-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சு. செல்வகுமார், இ.கா.ப., சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

போட்டி விவரங்கள்:

  • 17 முதல் 25 வயதுடைய ஆண்களுக்கு 8 கி.மீ மற்றும் பெண்களுக்கு 5 கி.மீ தூரம்.
  • 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ மற்றும் பெண்களுக்கு 5 கி.மீ தூரம் எனப் பிரிவுகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் 4 முதல் 10-ஆம் இடம் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு. லெனின், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி. பிரேமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔